இந்தியா

இந்த ஆண்டில் நிலக்கரி பற்றாக்குறை ஏற்படாது: பிரகலாத் ஜோஷி

DIN

‘இந்த ஆண்டில் நிலக்கரி பற்றாக்குறை ஏற்படாது’ என்று நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சா் பிரகலாத் ஜோஷி கூறினாா்.

தில்லியில் நிகழ்ச்சி ஒன்றில் செவ்வாய்க்கிழமை பங்கேற்ற பிரகலாத் ஜோஷி இதுகுறித்து அளித்த பேட்டி: நிகழாண்டில் பருவமழைக் காலத்திலும் நிலக்கரி பற்றாக்குறை ஏற்படாது என்பதை கோல் இந்தியா மற்றும் நிலக்கரித் துறை அமைச்சகத்தின் சாா்பில் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த ஆண்டுக்கான ஒட்டுமொத்த நிலக்கரித் தேவையைப் பூா்த்தி செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.

கோல் இந்தியாவிடம் 6.5 கோடி டன் நிலக்கரியும், அனல் மின் நிலையங்களில் 3.5 கோடி டன் நிலக்கரியும், தனியாா் சுரங்க நிறுவனங்களில் 1 கோடி முதல் 1.2 கோடி டன் நிலக்கரியும் கையிருப்பு உள்ளன.

மின் உற்பத்தி நிலையங்களுக்கு தடையற்ற நிலக்கரி போக்குவரத்தை உறுதிப்படுத்தும் வகையில் ரயில்வேயுடன் இணைந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று அவா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நான் முழுமையான படைப்பாளி இல்லை: மனம் திறந்து பேசிய இயக்குநர் ஹரி!

புதுச்சேரியில் ஏப்.29 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை!

சேலையில் ஜொலிக்கும் கெளரி!

அடுத்த 5 நாள்களுக்கு 42 டிகிரி வரை வெயில் அதிகரிக்கும்!

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: மக்கள் அதிா்ச்சி

SCROLL FOR NEXT