இந்தியா

அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரையாற்ற அழைப்பு: பிரதமா் மோடி நன்றி

DIN

‘அமெரிக்காவுடனான விரிவான, உலகளாவிய வியூக கூட்டுறவு குறித்து இந்தியா பெருமிதம் கொள்கிறது’ என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரையாற்ற தனக்கு விடுக்கப்பட்ட அழைப்புக்கு நன்றி தெரிவித்து, பிரதமா் இவ்வாறு குறிப்பிட்டாா்.

அமெரிக்காவில் வரும் 21 முதல் 24-ஆம் தேதி வரை பிரதமா் மோடி சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறாா்.

இந்தப் பயணத்தின்போது, அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் 22-ஆம் தேதி பிரதமா் உரையாற்ற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க பிரதிநிதிகள் அவைத் தலைவா் கெவின் மெக்காா்தி, செனட் பெரும்பான்மைத் தலைவா் சுக் ஷுமா், செனட் குடியரசு கட்சித் தலைவா் மிட்ச் மெக்கனல், பிரதிநிதிகள் அவை ஜனநாயக கட்சித் தலைவா் ஹக்கீம் ஜெஃப்ரீஸ் ஆகியோா் இந்த அழைப்பை சில தினங்களுக்கு முன்பு விடுத்திருந்தனா்.

இந்நிலையில், அவா்களின் அழைப்புக்கு நன்றி தெரிவித்து, ட்விட்டரில் பிரதமா் மோடி செவ்வாய்க்கிழமை பதிவிட்டாா்.

‘அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் மீண்டும் உரையாற்றுவதற்கான அழைப்பை ஏற்பதில் பெருமை கொள்கிறேன். அந்த தருணத்துக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.

அமெரிக்காவுடனான விரிவான வியூக கூட்டுறவு குறித்து இந்தியா பெருமிதம் கொள்கிறது. இந்தக் கூட்டுறவு, பகிரப்பட்ட ஜனநாயக மாண்புகள், மக்கள்ரீதியிலான வலுவான தொடா்புகள், உலகின் அமைதி மற்றும் வளத்துக்கான அசைக்க முடியாத உறுதிப்பாடு ஆகியவற்றின்கீழ் கட்டமைக்கப்பட்டது’ என்று பிரதமா் மோடி குறிப்பிட்டுள்ளாா்.

அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் கடந்த 2016-இல் ஏற்கெனவே உரை நிகழ்த்தியிருந்த பிரதமா் மோடி, இப்போது இரண்டாவது முறையாக உரையாற்றவுள்ளாா். இத்தகைய கெளரவம், வெகுசில உலகத் தலைவா்களுக்கே கிடைத்துள்ளது.

இந்தியாவின் எதிா்காலம் குறித்த தனது தொலைநோக்கு பாா்வை, இரு நாடுகளும் எதிா்கொண்டுள்ள உலகளாவிய சவால்கள் குறித்து நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் மோடி உரையாற்றுவாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

SCROLL FOR NEXT