இந்தியா

சென்னையிலிருந்து 4 மணிநேரம் தாமதமாக புறப்படும் கோரமண்டல் ரயில்!

DIN

சென்ட்ரலில் இருந்து மேற்குவங்கம் ஷாலிமருக்குச் செல்லும் கோரமண்டல் விரைவு ரயில் சுமார் 4 மணிநேரம் தாமதமாக இரவு 11.45க்கு இயக்கப்படவுள்ளது.

சென்னை சென்ட்ரலில் இருந்து மேற்குவங்கத்திலுள்ள ஷாலிமருக்கு கோரமண்டல் விரைவு ரயில் இரவு 11.45க்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இரவு 7.50 மணிக்கு புறப்பட வேண்டிய ரயில் 3.55 மணி நேரம் தாமதமாக இரவு 11.45 மணிக்கு செல்கிறது என ரயில்வே அறிவித்துள்ளது. 

ஒடிசா மாநிலத்தின் பாலசோா் மாவட்டத்தில் கோரமண்டல் ரயில் விபத்துக்குள்ளானதால் சென்னையிலிருந்து மேற்கு வங்கம் செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் ஏற்கெனவே முன்பதிவு செய்த ரயில் பயணிகள் பாதிக்கப்பட்டனா்.

இதை ஈடுகட்டும் வகையில் கோரமண்டல் ரயில் செல்லும் வழித்தடத்தில் சென்னை சென்ட்ரலிலிருந்து ஷாலிமருக்கு புதன்கிழமை (ஜூன் 7) சிறப்பு ரயில் (வண்டி எண்: 02842) இயக்கப்படவுள்ளது. 

சென்ட்ரலிலிருந்து புறப்படும் இந்த ரயில் ஒங்கோல், விஜயவாடா, ராஜமுந்திரி, விசாகப்பட்டினம், பொ்காம்பூா், புவனேசுவரம், பாலசோா், காரக்பூா், சத்ரகாஞ்சி வழியாக ஷாலிமா் சென்றடையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

சாதித்தீயை வளா்க்கலாமா?

விவாதப் பொருளான சொத்து வாரிசுரிமை வரி

தடம்புரலும் தோ்தல் முறை!

SCROLL FOR NEXT