இந்தியா

நாட்டில் கரோனா சிகிச்சையில் 2,831 பேர்!

7th Jun 2023 11:29 AM

ADVERTISEMENT

 

இந்தியாவில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 2,831 ஆகப் பதிவாகியுள்ளது. 

கரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் நாள்தோறும் வெளியிட்டு வருகிறது. 

அதன்படி, நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 214 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை (4,49,92,094) ஆக உயர்ந்துள்ளது. 

ADVERTISEMENT

கடந்த 24 மணி நேரத்தில் புதிய இறப்புகள் எதுவும் பதிவாகவில்லை. இதையடுத்து இதுவரை பலியானோர் எண்ணிக்கை  5,31,884 ஆக உள்ளது. 

படிக்க: ஜூன் 17ல் மாணவர்களை சந்திக்கிறார் நடிகர் விஜய்!

இதுவரை மொத்தம் 4,44,57,379 பேர் நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். குணமடைந்தோர் விகிதம் 98.81 சதவீதமாக உள்ளது. 

நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை 220.66 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT