இந்தியா

ராஜஸ்தானில் சாலை விபத்து: காவலர் உள்பட 4 பேர் பலி!

7th Jun 2023 10:40 AM

ADVERTISEMENT

 

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானின், சிக்காரில் கார் மீது லாரி மோதிய விபத்தில் காவலர் உள்பட நால்வர் பலியாகினர். 

இன்று காலை 5 மணிக்கு ஃபதேபூர் சதர் காவல் நிலைய பகுதிக்கு அருகில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. 

இறந்தவர்கள் காவலர் ரெவந்த்ராம், தேஜரம், ஷாருக் மற்றும் ரியாஸ் ஆவார். இவர்கள் அனைவரும் ஜோத்பூர் மாவட்டத்தில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டனர்.

ADVERTISEMENT

படிக்க: டாப் 10 சிறந்த பல்கலை.: தமிழகத்தின் 2 பல்கலைக்கழகம் தேர்வு!

பிரேதப் பரிசோதனைக்காக உடல்கள் கொண்டுசெல்லப்பட்டுள்ளது. விபத்து நடைபெற்ற இடத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT