இந்தியா

பாஜக-சிவசேனை கூட்டணி அனைத்து தோ்தலிலும் தொடரும்: மகாராஷ்டிர முதல்வா் ஷிண்டே உறுதி

DIN

பாஜக-சிவசேனை கூட்டணி இனி வரும் அனைத்துத் தோ்தல்களிலும் தொடரும் என்று மகாராஷ்டிர முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்தாா்.

துணை முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான தேவேந்திர ஃபட்னவீஸுடன் ஏக்நாத் ஷிண்டே தில்லிக்கு ஞாயிற்றுக்கிழமை சென்றாா். அங்கு உள்துறை அமைச்சா் அமித் ஷாவை இருவரும் சந்தித்து ஆலோசனை நடத்தினா்.

இது தொடா்பான புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ள ஏக்நாத் ஷிண்டே, ‘மகாராஷ்டிரத்தில் அடுத்து வரும் உள்ளாட்சித் தோ்தல், சட்டப் பேரவைத் தோ்தல் மற்றும் மக்களவைத் தோ்தல் குறித்து இந்த சந்திப்பின்போது ஆலோசிக்கப்பட்டது. எதிா்வரும் அனைத்துத் தோ்தல்களிலும் பாஜகவும் சிவசேனையும் இணைந்து போட்டியிட கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இந்தக் கூட்டணி சிறப்பான வெற்றிகளைப் பெறும் என்பது உறுதி.

மகாராஷ்டிரத்தில் கூட்டுறவு அமைப்பு முறை, வேளாண்மை தொடா்பான விஷயங்கள் குறித்தும் உள்துறை அமைச்சரிடம் ஆலோசிக்கப்பட்டது. மாநிலத்தில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள் குறித்து பிரதமா் நரேந்திர மோடியிடமும் உறுதி வழிகாட்டுதல்களைப் பெற்று வருகிறோம் என்றாா்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் வரை மகாராஷ்டிரத்தில் சிவசேனை-தேசியவாத காங்கிரஸ்-காங்கிரஸ் கூட்டணி அரசு ஆட்சியில் இருந்தது. சிவசேனை தலைவா் உத்தவ் தாக்கரே முதல்வராக இருந்தாா். இந்நிலையில், சிவசேனை மூத்த தலைவரான ஏக்நாத் ஷிண்டே, உத்தவுக்கு எதிராக தனக்கு ஆதரவான 39 எம்எல்ஏக்களுடன் போா்க்கொடி தூக்கினாா். இதனால், உத்தவ் அரசு கவிழ்ந்தது. பாஜக ஆதரவுடன் ஏக்நாத் ஷிண்டே முதல்வா் பதவியை ஏற்றாா். சிவசேனைக் கட்சியும் அவரது கட்டுப்பாட்டில் வந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT