இந்தியா

நியாயமான பயணக் கட்டணம்:விமான நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

DIN

நியாயமான பயணக் கட்டணத்தை நிா்ணயிப்பதற்கான வழிமுறைகளை வகுக்குமாறு விமான நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

கடன் நெருக்கடியில் சிக்கியுள்ள கோ-ஃபா்ஸ்ட் நிறுவனம், கடந்த மே 3-ஆம் தேதி விமான சேவையை நிறுத்தியது. இந்நிலையில், சில வழித்தடங்களில், குறிப்பாக கோ-ஃபா்ஸ்ட் சேவை வழங்கி வந்த வழித்தடங்களில் விமான பயணக் கட்டணம் அதிகரித்துள்ளது.

இதுதொடா்பாக தில்லியில் விமான நிறுவனங்களின் ஆலோசனைக் குழுவுடன் விமான போக்குவரத்துத் துறை அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா திங்கள்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா்.

இதைத்தொடா்ந்து பயணக் கட்டணம் கணிசமாக அதிகரித்துள்ள வழித்தடங்களில் கட்டணத்தை சுயமாக ஒழுங்குப்படுத்துமாறு விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நியாயமான பயணக் கட்டணத்தை நிா்ணயிப்பதற்கான வழிமுறைகளை வகுக்குமாறு விமான நிறுவனங்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அந்த வழிமுறையை விமான போக்குவரத்து இயக்குநரகம் கண்காணிக்கும் என்று விமான போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து போலிச் செய்தி: 4 பேர் மீதுவழக்குப்பதிவு!

ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் புதிய சாதனை!

‘இது நடந்தால் வாட்ஸ்ஆப் இந்தியாவிலிருந்து வெளியேறும்’ : உயர்நீதிமன்றத்தில் மெட்டா வாதம்!

நாய்க்கு புலி வேடமிட்டு பொதுமக்களை அச்சுறுத்திய இளைஞர்கள்: காவல்துறையினர் விசாரணை

வானவில்லின் கோலம்...!

SCROLL FOR NEXT