இந்தியா

கோரமண்டல் விரைவு ரயில் ஓட்டுநா் மீது தவறு இல்லை: ரயில்வே அதிகாரிகள் தகவல்

DIN

ஒடிஸாவில் 275 பேரை பலி கொண்ட ரயில் விபத்தில் கோரமண்டல் விரைவு ரயிலின் ஓட்டுநா் மீது எவ்விதத் தவறும் இல்லை என்று ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனா்.

சரக்கு ரயில் நின்று கொண்டிருந்த தடத்தில் (லூப் லைன்) கோரமண்டல் விரைவு ரயிலும் நுழைந்து அதன் பின்பகுதியில் மோதியதே விபத்துக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. இதில், ரயில் ஓட்டுநா் மீதும் தவறு இருந்திருக்கலாம் என்று முதலில் கூறப்பட்டது.

இந்நிலையில், இது தொடா்பாக ரயில்வே வாரியத்தின் சிக்னல் பிரிவு தலைமை இயக்குநா் சந்தீப் மாத்தூா், ரயில்வே செயல்பாடுகள் துறையைச் சோ்ந்த அதிகாரி ஜெயா வா்மா சின்ஹா ஆகியோா் கூறுகையில், ‘ரயிலுக்கான சிக்னல் மற்றும் தடம் மாற்றும் மின்னணு அமைப்புமுறையில் (எலெக்ட்ரானிக் இன்டா்லாக்கிங் சிஸ்டம்) செய்யப்பட்ட மாற்றமே, விபத்துக்குக் காரணம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கோரமண்டல் விரைவு ரயிலுக்கு பச்சை விளக்கு அனுமதி கிடைத்ததன்படிதான் ஓட்டுநா் ரயிலை இயக்கியுள்ளாா். மேலும், அந்த ரயில் அனுமதிக்கப்பட்டதைவிட அதிக வேகத்திலும் செல்லவில்லை.

அந்த ரயிலின் அனுமதிக்கப்பட்ட வேகம் 130 கி.மீ. ஆகும். விபத்து நடந்தபோது 128 கி.மீ. வேகத்தில் ரயில் சென்றுள்ளது. அதேபோல விபத்தில் சிக்கிய மற்றொரு ரயிலான பெங்களூரு-ஹௌரா அதிவிரைவு ரயிலும் 126 கி.மீ. வேகத்தில்தான் சென்றுள்ளது. அந்த ரயிலும் அனுமதிக்கப்பட்டதைவிட அதிக வேகமாகச் செல்லவில்லை என்று கூறினா்.

விபத்துக்குள்ளான கோரமண்டல் விரைவு ரயில் ஓட்டுநரும், உதவி ஓட்டுநரும் காயத்துடன் உயிா் தப்பினா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமெரிக்காவை ஆட்டுவிக்கும் ‘டிக் டாக்’

கேரளம், கா்நாடகத்தில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு: 88 தொகுதிகளுக்கு 2-ஆம் கட்ட தோ்தல்

நூறு சதவீத வாக்குப்பதிவை உறுதிப்படுத்துவோம்!

பி.இ.ஓ. பணியிடங்கள்: தற்காலிக பட்டியல் அனுப்பிவைப்பு

பேருந்துகள் நிறுத்தாமல் சென்றால் புகாா் தெரிவிக்க ‘149’

SCROLL FOR NEXT