இந்தியா

ஒடிசா ரயில் விபத்து: மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்களின் பலி எண்ணிக்கை 81ஆக உயர்வு!

DIN

ஒடிசா மாநிலத்தில் ஏற்பட்ட ரயில் விபத்தில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்களின் பலி எண்ணிக்கை 81ஆக உயர்ந்துள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. 

ஞாயிற்றுக்கிழமை மாலை முதல்வர் மம்தா பானர்ஜி 62 பேர் பலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று காலை நிலவரப்படி இது 81 உயர்ந்துள்ளது. தொடர்ந்து உடல்கள் அடையாளம் காணும் பணி நடைபெற்று வருவதால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அச்சம் எழுந்துள்ளது. 

முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் பயணம் செய்தவர்களின் பெயர் பட்டியல் இதுவரை கிடைக்கப்படாததால், பலியானோர் எண்ணிக்கை மாறுபடும் என்று அவர் தெரிவித்தார். அதன்படி இறப்பு எண்ணிக்கையில் அதிகபட்சம் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்திலிருந்து பலியானோர் எண்ணிக்கை 31 ஆகப் பதிவாகியுள்ளது. 

இதற்கிடையில், திரினாமூல் காங்கிரஸ் ஆறு உறுப்பினர்களைக் கொண்ட குழு அறிவித்துள்ளது. ரயில் விபத்தில் பலியானோர் குடும்பங்களைத் தனிப்பட்ட முறையில் பார்வையிட்டு, கட்சியின் சார்பாக ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் இழப்பீடு வழங்கப்படுகிறது. 

கடந்த ஜூன் 2-ம் தேதி ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டம் அருகே அடுத்தடுத்து மூன்று ரயில்கள் மோதிய விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 288 ஆக உயர்ந்துள்ளது. காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 1000ஐக் கடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏப். 29 முதல் மே 13 வரை வேலூரில் கோடை கால விளையாட்டு பயிற்சி

தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு

காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனம் பட்டமேற்பு விழா: மடாதிபதிகள், ஆதீனங்கள் பங்கேற்பு

மது பாக்கெட்டுகளை பதுக்கி விற்றவா் கைது

தேசிய திறனறி தோ்வில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு

SCROLL FOR NEXT