இந்தியா

வெளியுறவு அமைச்சகத்தின் தலைமையகத்தில் தீ விபத்து!

5th Jun 2023 01:52 PM

ADVERTISEMENT

தில்லியில் உள்ள வெளியுறவு அமைச்சகத்தின் தலைமையகத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

தில்லி ஜவஹர்லால் நேரு பவனில் இன்று காலை 10:30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. கட்டிடத்தின் தரை தளத்தில் இருந்து பரவிய தீயானது, மேல் தளங்களுக்கும் பரவி விபத்து ஏற்பட்டது.

சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் காயமோ அல்லது உயிரிழப்போ ஏற்பட்டதாக இதுவரை தகவல் எதும் வெளியாகவில்லை.

இருப்பினும், தீ விபத்தால் பொருட் சேதம் ஏற்பட்டுள்ளது. விபத்துக்கான காரணத்தை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

ADVERTISEMENT

ஜவஹர்லால் நேரு பவன் தில்லியின் அமைந்துள்ள அரசு அலுவலக கட்டிடம். இந்த கட்டிடத்தில் வெளியுறவு அமைச்சகம், நிதி அமைச்சகம் மற்றும் உள்துறை அமைச்சகம் உள்பட பல அரசு துறைகளின் அலுவலகங்கள் உள்ளன.

இதையும் படிக்க: சீனாவில் நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு!

கூடிய விரைவில் கட்டிடத்தை சீரமைத்து தருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இருப்பினும், மறுகட்டமைப்பு செய்ய எவ்வளவு காலம் எடுக்கும் என்பது குறித்து தகவல் ஏதும் இதுவரை வெளியாகவில்லை.

ADVERTISEMENT
ADVERTISEMENT