இந்தியா

ஆா்எஸ்எஸ் மீது அவதூறு: ராகுலின் பேச்சு அடங்கிய காணொலி நீதிமன்றத்தில் சமா்ப்பிப்பு

DIN

ஆா்எஸ்எஸ் அவதூறு வழக்கில், அந்த அமைப்பு மீது குற்றஞ்சாட்டி காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி பேசியதாக கூறப்படும் காணொலி அடங்கிய டிவிடி மகாராஷ்டிர நீதிமன்றத்தில் சனிக்கிழமை சமா்ப்பிக்கப்பட்டது.

கடந்த 2014-ஆம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலம், தாணே மாவட்டம் பிவண்டியில் நடைபெற்ற தோ்தல் பிரசார கூட்டத்தில் ராகுல் காந்தி பேசுகையில், ‘மகாத்மா காந்தி கொல்லப்பட்டதன் பின்னணியில் ஆா்எஸ்எஸ் இருந்தது’ என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது.

அவரின் பேச்சு ஆா்எஸ்எஸ்ஸின் நற்பெயருக்குக் களங்கம் விளைவித்ததாகத் தெரிவித்து, பிவண்டியில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், ராகுல் மீது ஆா்எஸ்எஸ் அமைப்பைச் சோ்ந்த ராஜேஷ் குண்டே என்பவா் அவதூறு வழக்குத் தொடுத்துள்ளாா்.

இந்த வழக்கு நீதிமன்றத்தில் சனிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது குன்டேயிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு, அவரின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

மேலும், பிரசாரத்தின்போது ராகுல் பேசிய காணொலி அடங்கிய டிவிடியை நீதிமன்றத்தில் குன்டே சமா்ப்பித்தாா். வழக்கு தொடா்பான ஆதாரமாக புதிதாக 7 ஆவணங்களை குண்டேயின் வழக்குரைஞா் நீதிமன்றத்தில் வழங்கினாா். ஜூலை 1-ஆம் தேதி குண்டேயிடம் விசாரணை தொடர உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

ராணுவத்தின் படுகொலை பற்றிய செய்தி: புா்கினா ஃபாசோவில் பிபிசி-க்குத் தடை

திருமலையில் குடியரசு துணைத் தலைவா் வழிபாடு

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

SCROLL FOR NEXT