இந்தியா

இந்திய மக்கள் பாஜகவை தோற்கடிக்கப் போகிறார்கள்: ராகுல் காந்தி

4th Jun 2023 04:04 PM

ADVERTISEMENT

கர்நாடகத் தேர்தலின் வெற்றியைத் தொடர்ந்து தெலங்கானா மற்றும் மற்ற மாநிலங்களின் தேர்தல்களிலும் காங்கிரஸ்  பாஜகவை வீழ்த்தும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ்  மட்டுமின்றி மக்களும் பாஜகவின் வெறுப்பு கலந்த சித்தாந்தத்தை வெறுத்து அவர்களை தோற்கடிக்க தயாராகி விட்டதாகவும் அவர் தெரிவித்தார். வாஷிங்டன் மற்றும் சான் பிரான்ஸிஸ்கோ பயணத்தை முடித்துக் கொண்டு நியூயார்க் வந்தடைந்த அவர் இதனை தெரிவித்தார். 

இதையும் படிக்க: கிரிக்கெட் வீரர்களின் நேரத்தில் சர்வதேச கிரிக்கெட்டின் ஆதிக்கத்தை மாற்றிய ஐபிஎல்: பாட் கம்மின்ஸ்

இது குறித்து அவர் பேசியதாவது: நாங்கள் கர்நாடகத்தில் பாஜகவை அழிக்க முடியும் என காட்டியுள்ளோம். நாங்கள் பாஜகவை தோற்கடிக்கவில்லை, அழித்துள்ளோம். கர்நாடகத்தில் அவர்களை நாங்கள் நீக்கிவிட்டோம். பாஜகவிடம் ஒட்டுமொத்த ஊடகமும் இருந்தது. எங்களிடம் இருந்த பணத்தைக் காட்டிலும் பாஜவிடம் 10 மடங்கு அதிகமாக இருந்தது. அவர்களிடம் அரசாங்கமும் இருந்தது. அவர்களிடம் விசாரணை அமைப்புகளும் இருந்தன. அவர்களிடம் எல்லாமும் இருந்தன. இருந்தும் அவர்களை நாங்கள் அழித்துவிட்டோம். நான் உங்களுக்கு ஒன்றை தெரியப்படுத்த விரும்புகிறேன். அடுத்து தெலங்கானா தேர்தலில் அவர்களை நாங்கள் அழிக்க உள்ளோம். இந்த தேர்தலுக்குப் பிறகு தெலங்கானாவில் பாஜகவை பார்ப்பது மிகவும் கடினம்.

ADVERTISEMENT

தெலங்கானா மட்டுமின்றி அடுத்தடுத்து நடைபெறவுள்ள ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலத் தேர்தல்களிலும் பாஜகவை வீழ்த்துவோம். கர்நாடகத்தின் முடிவுகளைப் போலவே இந்த மாநிலங்களின் முடிவுகளும் இருக்கும். காங்கிரஸ் மட்டும் பாஜகவை தோற்கடிக்கப் போவதில்லை. இந்திய மக்கள் , மத்தியப் பிரதேச மக்கள், தெலங்கானா மக்கள், ராஜஸ்தான் மக்கள் மற்றும் சத்தீஸ்கர் மக்கள் பாஜகவினை தோற்கடிக்கப் போகிறார்கள். பாஜகவின் வெறுப்புணர்வு மிகுந்த கொள்கைகளை மக்கள் புரிந்து கொண்டனர்.

இதையும் படிக்க: எஸ்.ஜே.சூர்யா படத்தின் டிரைலரை வெளியிட்ட விஜய் பட இயக்குநர்!

2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பாஜவினை வீழ்த்துவோம். இது சித்தாந்தங்களுக்கு இடையிலான மோதல். ஒரு புறம் பாஜவின் வெறுப்புணர்வு நிரம்பிய சித்தாந்தமும், மறுபுறம் காங்கிரஸின் அன்பு நிரம்பிய சித்தாந்தமும் உள்ளன என்றார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT