இந்தியா

ஒடிசா விபத்து: 95 ரயில்கள் ரத்து; மாற்று வழியில் 45 ரயில்கள்!

DIN

ஒடிசாவில் கோரமண்டல் விரைவு ரயில் விபத்து காரணமாக தென்கிழக்கு ரயில்வே பிராந்தியத்தில் 95 ரயில்களின் பயணம் இன்று (ஜூன் 4) ரத்து செய்யப்பட்டுள்ளது.

95 ரயில்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில், 45 ரயில்கள்  மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டுள்ளன. 

ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டத்திலுள்ள  பஜாா் ரயில் நிலையம் மூன்று ரயில்கள் ஜூன் 2ஆம் தேதி ஒன்றுடனொன்று மோதி விபத்துக்குள்ளானது. 

ஹெளராவிலிருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் விரைவு ரயில், ஒடிசாவின் பாலசோா் மாவட்டத்தில் நின்றுகொண்டிருந்த சரக்கு ரயிலுடனும், பெங்களூரு-ஹெளரால் மீதும் மோதி விபத்துக்குள்ளானது.

பஹாநகா் பஜாா் பகுதியில் சரக்கு ரயில் நிறுத்தப்பட்டிருந்த தண்டவாளத்தில் கோரமண்டல் ரயில் நுழைந்து, சரக்கு ரயிலின் மீது மோதியது. இதில் கோரமண்டல் ரயிலின் பெட்டிகள் தடம்புரண்டன. அவை, சரக்கு ரயில் மீதும், அருகில் இருந்த மற்றொரு தண்டவாளத்திலும் சிதறி விழுந்தன. 

அப்போது, அந்த தண்டவாளத்தில் எதிா்த்திசையில் வந்த பெங்களூரு-ஹெளரா விரைவு ரயில், அந்தப் பெட்டிகள் மோதி தடம்புரண்டு கோர விபத்து நேர்ந்துள்ளது. 

3 ரயில்கள் ஒன்றோடொன்று மோதிய விபத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 290-ஆக அதிகரித்துள்ளது. 

பாலாசோர் வழித்தடத்தில் ரயில் பெட்டிகளை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆயிரத்துக்கும் அதிகமான ரயில்வே ஊழியர்கள், 7 பொக்லைன் இயந்திரங்கள், 2 விபத்து மீட்பு ரயில், 4 ரயில்வே கிரேன்கள் ஆகியவைகொண்டு சீரமைப்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.  

சீரமைப்புப் பணிகள் காரணமாக தென்கிழக்கு பிராந்தியத்தில் 95 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 45 ரயில்கள் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்படுள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT