இந்தியா

ஒடிசா ரயில் விபத்து நடந்த பகுதியில் பிரதமர் மோடி ஆய்வு

3rd Jun 2023 04:26 PM

ADVERTISEMENT


ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டத்தில் கோரமண்டல் விரைவு ரயில் உள்பட மூன்று ரயில்கள் மோதி விபத்துக்குள்ளான இடத்துக்கு நேரில் வந்த பிரதமர் நரேந்திர மோடி, மீட்புப் பணிகளை ஆய்வு செய்தார்.

தில்லியில் இருந்து புவனேஸ்வரத்துக்கு விமானத்தில் வந்த பிரதமர் நரேந்திர மோடி, அங்கிருந்து இந்திய விமானப் படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டரில் நேராக பாலாசோரில் விபத்துப் பகுதிக்கு வந்தார்.

 

அங்கு விபத்தில் சிக்கி சின்னா பின்னமாகியிருக்கும் ரயில் பெட்டிகளையும், துரித வேகத்தில் நடைபெற்று வரும் சீரமைப்புப் பணிகளையும் பிரதமர் மோடி நேரில் ஆய்வு செய்தார்.

ADVERTISEMENT

தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினருடன் தீயணைப்பு வீரர்கள் என ஆயிரக்கணக்கானோர் மீட்புப் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். ரயில் பெட்டிகளுக்குள் பயணிகள் யாரும் சிக்கியிருக்கிறார்களா எனும் தேடுதல் பணி இன்று மாலையில் முடிவடையலாம் என்று கூறப்பட்டது.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் வருகையையொட்டி, விபத்து நடந்த பகுதியில் ஏராளமான காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT