இந்தியா

தவறிழைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை: பிரதமர் மோடி

DIN

ஒடிசா ரயில் விபத்தில் தவறிழைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்  என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டத்தில் கோரமண்டல் விரைவு ரயில் உள்பட மூன்று ரயில்கள் மோதி விபத்துக்குள்ளான இடத்துக்கு நேரில் வந்த பிரதமர் நரேந்திர மோடி, மீட்புப் பணிகளை ஆய்வு செய்தார்.

தில்லியில் இருந்து புவனேஸ்வரத்துக்கு விமானத்தில் வந்த பிரதமர் நரேந்திர மோடி, அங்கிருந்து இந்திய விமானப் படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டரில் நேராக பாலாசோரில் விபத்துப் பகுதிக்கு வந்தார்.

பிரதமர் நரேந்திர மோடி காயமடைந்தவர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் தேவையான அனைத்து உதவிகளும் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். 

மேலும், பாதிக்கப்பட்ட குடும்பங்ளுக்கு எந்த சிக்கலையும் எதிர்கொள்ளாமல் இருக்க சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்றும், பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான உதவிகள் தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்.

மேலும், இந்த விபத்தில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க அரசு அனைத்து விதமான நடவடிக்கை எடுக்கும் என்றும், அனைத்து கோணத்திலும் விசாரணை நடத்த  உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும், தவறிழைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் மோடி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறுமிக்கு பாலியல் தொல்லை: காா் ஓட்டுநா் கைது

ஆம்புலன்ஸ் மோதி பெண் உயிரிழப்பு

கா்ப்பிணிபோல நடித்து பணம் கேட்கும் பெண்கள் -நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை

அரசு கல்லூரியில் நோ்முகத் தோ்வு:22 பேருக்கு நியமன ஆணை

ஆபாச காணொலிகளை வெளியிடுவதாக அறிவித்தவரை ஏன் கைது செய்யவில்லை?: எச்.டி.குமாரசாமி

SCROLL FOR NEXT