இந்தியா

5 டிரில்லியன் பொருளாதாரமாக மாற உலக தரத்திலான சாலைகள் அவசியம்: நிதின் கட்கரி

2nd Jun 2023 07:32 PM

ADVERTISEMENT

5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக இந்தியா மாறுவதற்கு உலக தரத்திலான சாலைகள் அவசியம் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

வதோதராவில் பொதுக் கூட்டம் ஓன்றில் பேசிய அவர் இதனை தெரிவித்தார். 

அப்போது அவர் பேசியதாவது: 2024 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் உள்ள அனைத்து நெடுஞ்சாலைகளும் உலகத் தரத்தில் மேம்படுத்தப்படும். நாட்டில் எந்த தேசிய நெடுஞ்சாலையில் நீங்கள் பயணித்தாலும் உங்களால் உலக தரத்திலான சாலை வசதியினை காண முடியும். நம் நாடு மாறி வருகிறது. இந்தியாவினை வளர்ச்சியடைந்த மற்றும் தன்னிறைவு பெற்ற நாடாக மாற்ற வேண்டும் என்பது பிரதமர் நரேந்திர மோடியின் கனவாகும்.

இதையும் படிக்க: மல்யுத்த வீரர்கள் நடத்தப்படும் விதம் மன வேதனை அளிக்கிறது: 1983 உலகக் கோப்பை வென்ற இந்திய அணி!

ADVERTISEMENT

வளர்ச்சியடைந்த மற்றும் தன்னிறைவு பெற்ற நாடு ஏழை, எளிய மக்களின் நலனில் அக்கறை செலுத்தும். பிரதமர் மோடி கூறியது போல இந்தியா 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற உலக தரத்திலான சாலை மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் என்பது அவசியம்.  அதை நிறைவேற்ற நாங்கள் முயற்சித்து வருகிறோம். குஜராத்தில் 2 லட்சம் கோடி மதிப்பிலான நெடுஞ்சாலை திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 2024 ஆம் ஆண்டுக்குள் நாட்டில் உள்ள அனைத்து நெடுஞ்சாலைகளும் உலகத் தரத்தில் இருக்கும் என உங்களுக்கு உறுதியளிக்கிறேன் என்றார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT