இந்தியா

தவறாக நடந்துகொண்டார்: பிரிஜ் பூஷணுக்கு எதிரான 2 எஃப்ஐஆர்

2nd Jun 2023 04:17 PM

ADVERTISEMENT


புது தில்லி: இந்திய மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பாஜக எம்.பி.யும் இந்திய மல்யுத்த சம்மேளன தலைவருமான பிரிஜ் பூஷண் சிங்குக்கு எதிராக பதிவு செய்யப்பட்டிருக்கும் இரண்டு முதல் தகவல் அறிக்கைகள் சொல்லப்பட்டிருக்கும் தகவல் வெளியாகியிருக்கிறது.

பிரிஜ் பூஷண் சிங்குக்கு எதிராக கடந்த ஏப்ரல் மாதம் 7 மல்யுத்த வீராங்கனைகள் கன்னௌட் பகுதி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், புகாரைப் பதிவு செய்ய காவல்துறையினர் தாமதம் செய்ததால், பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் உச்சநீதிமன்றத்தை நாடிய பிறகே, ஏப்ரல் 28ஆம் தேதி இரண்டு முதல் தகவல் அறிக்கைகள் மட்டும் பதிவு செய்யப்பட்டன.

மல்யுத்த வீராங்கனையான சிறுமி ஒருவர் அளித்த புகார், போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே அவா் மீது 40-க்கும் அதிகமான கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. பிரிஜ் பூஷண் சிங் மீது சிறுமி ஒருவா் பாலியல் தொல்லை வழக்கு கொடுத்த பின்னரும், போலீஸாா் அவரை கைது செய்ய தவறிவிட்டனா்.

பிரிஜ் பூஷண் மீது சிறுமி அளித்த புகாரில், இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவர் பிரிஜ் பூஷணை சந்திக்கச் சென்ற போது நடந்தது குறித்து விவரிக்கப்பட்டுள்ளது. அதில், பிரிஜ் பூஷண், சிறுமியை மிக இறுக்கமாகக் கட்டிப்பிடித்துக் கொண்டு, ஒரு புகைப்படம் எடுப்பது போல நடித்துள்ளார். பிறகு, சிறுமியை தன் பக்கமாக இழுத்து அவரது தோள்பட்டைகளை கடினமாக இறுக்கி, பிறகு அவரது கையை மார்பகம் வரை இறக்கியிருக்கிறார் என்று முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

பாலியல் ரீதியாக நடந்துகொண்டதாக, மற்றொரு மல்யுத்த வீராங்கனையின் புகாரும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிக்க.. பிரிஜ் பூஷண் சிங்கிற்கு எதிரானமைனா் புகாா்தாரரின் அடையாளம் வெளிப்படுத்தியவா் மீது வழக்குப் பதியக் கோரி காவல் துறைக்கு நோட்டீஸ்

எக்ஸ்பிரஸ் குழுமத்துக்குக் கிடைத்திருக்கும் இரண்டு முதல் தகவல் அறிக்கையின் தகவல்களிலும் 17 வயது சிறுமி உள்பட மல்யுத்த வீராங்கனைகள், பிரிஜ் பூஷணால் எதிர்கொண்ட மிக மோசமான அனுபவம் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், சிறுமி அளித்த புகாரின் கீழ் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில், பாலியல் ரீதியாக தனக்கு ஒத்துழைப்பு அளித்தால், அதற்கு கைமாறு செய்யப்படும் என்று பிரிஜ் பூஷண் கூறியதாகவும், அதற்கு சிறுமி தரப்பில், தினது சொந்த முயற்சி மற்றும் திறமையால்தான் தான் இங்கு வந்ததாகவும், தனது கடின உழைப்பைக் கொண்டே தான் முன்னேறிக் கொள்வேன் என்றும் பதிலளித்துவிட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறுமியின் தந்தை இது பற்றி குறிப்பிடுகையில், இதைத் தவிர, குற்றம்சாட்டப்பட்டவர், எனது மகளிடம், விரைவில் ஆசியன் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெறவிருக்கிறது. எனக்கு ஒத்துழைப்பு தராவிட்டால், வரவிருக்கும் சோதனைகளில் கடும் சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டிவரும் என்று எச்சரித்ததாகவும் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT