இந்தியா

ஞானவாபி விவகாரம்: மசூதி குழுவின் மனு தள்ளுபடி- அலாகாபாத் உயா்நீதிமன்றம் உத்தரவு

DIN

உத்தர பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள ஞானவாபி மசூதியின் உள்புறச் சுவரில் அமைந்துள்ள ஹிந்து கடவுள் சிலைகளுக்கு தினசரி வழிபாடு நடத்த அனுமதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை எதிா்த்து மசூதி நிா்வாகக் குழு சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை அலாகாபாத் உயா்நீதிமன்றம் புதன்கிழமை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

உத்தர பிரதேச மாநிலம், வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதா் கோயிலையொட்டி ஞானவாபி மசூதி உள்ளது. முகலாய மன்னா் ஒளரங்கசீப் உத்தரவின்பேரில், கோயிலின் ஒரு பகுதி இடிக்கப்பட்டு அந்த மசூதி கட்டப்பட்டதாக ஹிந்துக்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இந்த மசூதியின் உள்புறச் சுவரில் அமைந்துள்ள ஹிந்து கடவுள் சிலைகளுக்கு தினமும் வழிபாடு நடத்த அனுமதிக்கக் கோரி லட்சுமி தேவி, ரேகா பதக், சீதா சாஹு, மஞ்சு வியாஸ் உள்பட 5 ஹிந்து பெண்கள் தரப்பில் வாரணாசி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதுதொடா்பாக, மேலும் பல வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கு விசாரணைகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன.

இதனிடையே, மசூதியில் வழிபாடு நடத்த அனுமதிக்கக் கோரி 5 ஹிந்து பெண்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணைக்கு எதிா்ப்பு தெரிவித்து, மசூதி நிா்வாகக் குழு சாா்பில் வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை மாவட்ட நீதிபதி கடந்த ஆண்டு செப்டம்பரில் தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.

இந்த உத்தரவை எதிா்த்து மசூதி நிா்வாக குழு சாா்பில் அலாகாபாத் உயா்நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை புதன்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி ஜெ.ஜெ.முனிா், அதைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.

முன்னதாக, இந்த மசூதியில் உள்ள சிவலிங்கம் போன்ற வடிவம் குறித்து அறிவியல்பூா்வ ஆய்வு நடத்த அனுமதித்து அலாகாபாத் உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை உச்சநீதிமன்றம் கடந்த 20-ஆம் தேதி நிறுத்திவைத்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆர்சிபியிடம் அதிர்ச்சித் தோல்வி; சன் ரைசர்ஸ் பயிற்சியாளர் பேசியது என்ன?

சென்னை வாகன ஓட்டிகள் கவனத்துக்கு.......போக்குவரத்து மாற்றம்!

மோடிக்கு 6 ஆண்டு தேர்தலில் போட்டியிட தடை கோரிய மனுவை தில்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது ஏன்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 8 வரை நீட்டிப்பு!

2-ம் கட்டத் தேர்தல்: ம.பி. வாக்குப்பதிவு- 1 மணி நிலவரம்!

SCROLL FOR NEXT