இந்தியா

வெடிகுண்டு வைத்திருப்பதாக பயணி மிரட்டல்: மும்பை விமான நிலையத்தில் பரபரப்பு!

1st Jun 2023 03:24 PM

ADVERTISEMENT

 

மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில் பெண் பயணி ஒருவர் வெடிகுண்டு வைத்திருப்பதாகக் கூறியதையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

மும்பையில் இருந்து கொல்கத்தாவுக்குச் செல்லும் பெண் பயணி ஒருவர் தான் கொண்டுவந்த பொருள்களுக்கு கூடுதல் கட்டணம் செலுத்தும்படி அதிகாரிகள் கூறியுள்ளனர். 

படிக்க: ஜூன் மாதப் பலன்கள் (மேஷம் - கன்னி)

ADVERTISEMENT

இதையடுத்து கூடுதல் கட்டணம் செலுத்த அந்தப் பெண் பயணி மறுத்துள்ளார். பின்னர், தான் கொண்டுவந்த பையில் வெடிகுண்டு இருப்பதாகக் கூறி அதிகாரிகளை மிரட்டியுள்ளார். அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் அவர் கொண்டுவந்த பைகளை சோதனை செய்தனர். ஆனால், அதில் சந்தேகத்திற்குரிய எந்தவித பொருளும் காணப்படவில்லை.

படிக்க: ஜூன் மாதப் பலன்கள் (துலாம் - மீனம்)

பொருள்களுக்கு கூடுதல் கட்டணம் செலுத்துவதற்காக பெண் பயணி வெடிகுண்டு வைத்திருப்பதாக அங்குள்ளவர்களை பீதியடைய செய்துள்ளார்.

இதையடுத்து, இந்த சம்பவத்திற்குப் பிறகு சஹார் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு பெண் பயணி கைது செய்யப்பட்டார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT