இந்தியா

மே மாதமா? மழைக்காலமா? 1957-க்குப் பிறகு பெங்களூருவில் முதல்முறை

1st Jun 2023 02:45 PM

ADVERTISEMENT

பெங்களூருவில், கடந்து சென்ற மே மாதத்தில் மட்டும்,  இதுவரை இல்லாத அளவுக்கு மழைக்காலம் போல 31 செ.மீ. மழை பதிவாகியிருக்கிறது.

இதன் மூலம் கடந்த 1957ஆம் ஆண்டுக்குப் பிறகு அதிக மழைப்பொழிவைக் கொண்ட மே மாதமாக 2023 மே மாதம் பெயர்பெற்றுள்ளது.

வழக்கமாக மே மாதத்தில் இந்த மாநகரில் வெறும் 13 செ.மீ. மழைதான் பதிவாகும்.

இதற்கு முன்பும் கூட, அதாவது 1957ஆம் ஆண்டு கூட மே மாதத்தில் 28.7 செ.மீ. மழைதான் பதிவாகியிருந்ததாம். அதன்பிறகு 66 ஆண்டுகள் கழித்து பெங்களூருவில் மே மாதம் நல்ல மழை பெய்திருக்கிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

மே மாதத்தின் இறுதி நாள்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், நகரின் பல இடங்களில் சூறைக்காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது.

இந்த நிலையில், லேசான மழைக்கே வெள்ளக்காடாகும் பெங்களூருவில், மழைநீர் வடிகால்வாய்களை உருவாக்க ரூ.2,800 கோடி தேவைப்படும் என்றும், இதற்கு சுமார் ஒன்றரை ஆண்டுகள் வரை ஆகும் என்றும் கணக்கெடுக்கப்பட்டுள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT