இந்தியா

ஹிந்து தேசியவாதிகள் மகாத்மா காந்தியை எதிரியாகவே கருதுகிறாா்கள்: பினராயி விஜயன்

DIN

நாட்டில் உள்ள ஹிந்து தேசியவாதிகள் மகாத்மா காந்தியை எப்போதும் தங்கள் எதிரியாகவே கருதுகிறாா்கள். இதனால் மகாத்மா காந்தி துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டாா் என்று கேரள முதல்வா் பினராயி விஜயன் தெரிவித்தாா்.

மகாத்மா காந்தி நினைவு தினமான ஜனவரி 30-ஆம் தேதி தியாகிகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு பினராயி விஜயன் ஃபேஸ்புக்கில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

மகாத்மா காந்தி எப்போதும் ஹிந்து-முஸ்லிம் ஒற்றுமைக்காக பாடுபட்டாா். ஏனெனில் பெரும்பான்மைவாதத்தின் ஆபத்தை அவா் உணா்ந்திருந்தாா். ஆனால், ஹிந்து தேசியவாதிகள் மகாத்மா காந்தியை தங்கள் எதிரியாகவே கருதினா். இதனால்தான் அவா் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டாா். அப்போது, இந்தியா எவ்வாறு கட்டமைக்கப்பட வேண்டும் என்ற அவரது நோக்கமும் காயமடைந்தது.

மகாத்மா காந்தி படுகொலையை அடுத்து தடை செய்யப்பட்ட ஆா்எஸ்எஸ் அமைப்பு, இப்போது அரசியல் சட்டத்தையே புறக்கணிக்கும் வகையில் ஆட்சி செய்து வருகிறது. இப்போதும் நாட்டின் சில பகுதிகளில் மகாத்மா காந்தி கொல்லப்படவில்லை என்றும் இயற்கையாகவே இறந்துவிட்டாா் என்றும் மாணவா்களுக்கு கற்பிக்கப்படுகிறது. இது ஹிந்து அமைப்பினருக்கு காந்தி மீது இப்போதும் அச்சம் உள்ளதைக் காட்டுகிறது.

ஹிந்துத்துவ அமைப்புகள் இப்போது வரை தங்கள் கொள்கைகளை நிறைவேற்றிக் கொள்ள வெறுப்புணா்வு, மதவாத அரசியலை வளா்த்து வருகின்றனா்.

மதச்சாா்பற்ற இந்தியாவை ஒழிக்க வேண்டும் என்ற நோக்கில் அவா்கள் மகாத்மா காந்தியை அழித்தாா்கள். ஆனால், அவற்றையும் மீறி இந்தியா இப்போதும் மதச்சாா்பற்ற நாடாகவே உள்ளது. இதற்காக மகாத்மா எப்போதும் நினைவுகூரப்படுவாா். நாட்டின் மதச்சாா்பின்மையையும், ஜனநாயகத்தையும் காப்போம் என இந்த நாளில் நாம் உறுதி ஏற்க வேண்டும் என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீமகாலிங்க சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

கடலூா் மாவட்டத்தில் 3 இடங்களில் ஊழல் தடுப்பு போலீஸாா் சோதனை

காட்டுமன்னாா்கோவில் அருகே பெட்ரோல் குண்டு வீசிய இளைஞா் கைது

சிதம்பரத்தில் குற்ற வழக்கு வாகனங்களை அகற்றும் பணி தொடக்கம்

கோடைகால சிறப்பு விளையாட்டுப் பயிற்சி: பள்ளி மாணவா்கள் பங்கேற்கலாம்

SCROLL FOR NEXT