இந்தியா

சென்னை - பெங்களூரு ரயில் அடுத்த மாதத்திலிருந்து வேகமெடுக்கும்

DIN

சென்னை: சென்னை - பெங்களூரு மற்றும் திருப்பதி அல்லது மும்பை செல்லும் ரயில்கள், அடுத்த மாதம் முதல் கூடுதல் வேகத்தில் இயக்கப்படவிருக்கின்றன.

இந்த வழித்தடங்களில் அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச வேகத்தில் அதாவது மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தில் சென்னை - ஜோலார்பேட்டை பாதையில் ரயில்களை இயக்க அனுமதி கிடைத்துள்ளது.

இதுபோல வந்தே பாரத் ரயில் சேவையும் கூடுதல் வேகத்தில் இயக்கப்படுவதால் விரைவில் ரயில் பயணிகளுக்கு பயண நேரம் குறையும் வாய்ப்பு உள்ளது.

பெங்களூருவை வந்தேபாரத் ரயில்  4.25 மணி நேரத்திலும், சதாப்தி ரயில் 4.45 மணி நேரத்திலும் சென்றடைகின்றன. இந்த பயண நேரத்தில் விரைவில் அரை மணி நேரம் குறைந்துவிடும். 

இன்னும் தெற்மேற்கு ரயில்வே மண்டலத்துக்கு உள்பட்ட ஜோலார்பேட்டை - பெங்களூரு வழித்தடத்திலும் தண்டவாளங்கள் சரி செய்யப்பட்டுவிட்டால், அதிகபட்ச வேகத்தில் இந்த தடத்திலும் ரயில்கள் இயக்க அனுமதி கிடைக்கும் போது, இந்தப் பயண நேரம் மேலும் குறையும் வாய்ப்பும் உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமண உடையை மாற்றியமைத்த நடிகை சமந்தா!

ஆர்சிபியிடம் அதிர்ச்சித் தோல்வி; சன் ரைசர்ஸ் பயிற்சியாளர் பேசியது என்ன?

சென்னை வாகன ஓட்டிகள் கவனத்துக்கு.......போக்குவரத்து மாற்றம்!

மோடிக்கு 6 ஆண்டு தேர்தலில் போட்டியிட தடை கோரிய மனுவை தில்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது ஏன்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 8 வரை நீட்டிப்பு!

SCROLL FOR NEXT