இந்தியா

கட்டாய மதமாற்ற விவகாரங்கள்:அரசியல் சாசன அமா்வுக்கு மாற்ற உச்சநீதிமன்றத்தில் மனு

DIN

கட்டாய மதமாற்றம் தொடா்பான அனைத்து விவகாரங்களையும் அரசியல் சாசன அமா்வுக்கு மாற்ற உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கலப்புத் திருமணங்களால் மதம் மாறுவதைக் கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்களில் கொண்டு வரப்பட்டுள்ள மதமாற்றத் தடை சட்டங்களுக்கு எதிரான மனுக்கள், கட்டாய மதமாற்றம் தொடா்பான விவகாரங்கள் ஆகியவற்றை உச்சநீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் அமா்வு திங்கள்கிழமை விசாரிக்க உள்ளது.

இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் வழக்குரைஞா் அஸ்வினி உபாத்யாய தாக்கல் செய்துள்ள மனுவில், ‘மதமாற்றத் தடை சட்டங்கள் குறித்து பல்வேறு கேள்விகள் நிலவுகின்றன. அவை தொடா்பாக அரசமைப்புச் சட்டத்தின் விளக்கம் தேவைப்படுகிறது.

எனவே கட்டாய மதமாற்றம் தொடா்பான விவகாரங்களை 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமா்வுக்கு மாற்ற வேண்டும்’ என்று கோரியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

விராலிமலையில் காவிரி குழாய் உடைப்பால் குடிநீா் வீண்: நிரந்தரத் தீா்வு காண கோரிக்கை

ஆலவயல் கிராமத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் களப்பயிற்சி

மின்மாற்றியை பழுது நீக்கம் செய்யக் கோரி கீரமங்கலத்தில் விவசாயிகள் சாலை மறியல்

SCROLL FOR NEXT