இந்தியா

மருத்துவக் காப்பீடு வைத்திருப்பவரா நீங்கள்? இதெல்லாம் தெரியுமா?

DIN

பல ஆண்டுகாலமாக மருத்துவக் காப்பீடு வைத்திருக்கும் பலருக்கும், அவர்கள் எடுத்திருக்கும் காப்பீடு குறித்த சில அடிப்படைத் தகவல்கள் கூட தெரியாமல் இருப்பது ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.

அதாவது, தாங்கள் வைத்திருக்கும் மருத்துவக் காப்பீடு குறித்த அடிப்படையாக அறிய வேண்டிய தகவல்கள் கூட அறியாமல் இருக்கும் அதிர்ச்சித் தகவலும் கிடைத்துள்ளது.

தனியார் காப்பீட்டு நிறுவனம் ஒன்று நடத்திய இந்த ஆய்வில், காப்பீடு வைத்திருப்பவர்களும், மருத்துவக் காப்பீடு எடுக்க வேண்டும் என்று திட்டமிட்டிருப்பவர்களிடமும் சில கேள்விகள் கேட்கப்பட்டு ஆய்வு முடிவுகள் வெளியாகின.

அதாவது, மருத்துவக் காப்பீடு வைத்திருக்கும் 20 சதவீதம் பேருக்கு, அந்த காப்பீட்டுக்கான விதிமுறைகள் தெரியவில்லை. 40 சதவீதம் பேருக்கு, காப்பீட்டு ஒழுங்கமைப்பு பற்றி தெரிந்திருக்கவில்லை.  மேலும் 90 சதவீதம் பேருக்கு, இந்த காப்பீடுகள் மருத்துவமனைக் கட்டணங்களை மட்டுமே செலுத்தும் என்று நம்பிக்கொண்டிருக்கிறார்கள்.

ஒட்டுமெத்தமாகப் பார்க்கப்போனால், மருத்துவக் காப்பீடு தொடர்பான புரிதல் காப்பீடு வைத்திருப்பவர்களுக்கும் கூட மிகக் குறைவாகவே இருக்கிறது. ஏற்கனவே காப்பீடு வைத்திருப்பவர்களில் 42 சதவீதம் பேருக்கு டிபிஏ எனப்படும் மூன்றாம் நபரின் நிர்வாகம் என்பது குறித்தோ, கிளைம் செய்யாதவர்களுக்கான போனஸ் எனப்படும் என்சிபி பற்றியோ, புறநோயாளிகள் பிரிவுக்கான வசதி ஓபிடி பற்றியோ தெரிந்திருக்கவில்லை.

மருத்துவக் காப்பீடுகளின் விதிமுறைகள் எப்போதுமே சிக்கலான வாசகங்களைக் கொண்டிருக்கும். இதனை சாமானிய மக்களால் புரிந்துகொள்ளவே முடியாது. இங்குதான் காப்பீடு தொடர்பான அறிவு தேவைப்படுகிறது. எனவே, சாதாரண மக்களுக்கும் மருத்துவக் காப்பீடு தொடர்பான தெளிவுகளை ஏற்படுத்த வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.

இதற்கு இணையாகவே, வாகன காப்பீட்டு விதிமுறைகள் குறித்த புரிதல்களும் இருக்கின்றன என்று அந்த ஆய்வு கூறுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.150 கோடி மோசடி: மிசோரம் மாநிலத்தில் 11 பேர் கைது!

’அம்மாடி’.. பிந்து மாதவி!

மார்கழிப் பூ.. மடோனா!

கொள்ளை நிலா..!

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் யார் இடம்பெற வேண்டும்? யுவராஜ் சிங் பதில்!

SCROLL FOR NEXT