இந்தியா

வீழ்ச்சியடைந்த அதானி குழுமப் பங்குகள்: நிதியமைச்சர் மௌனம் காப்பது ஏன் என காங்கிரஸ் கேள்வி!

DIN

எல்ஐசி மற்றும் எஸ்பிஐ,  அதானி குழுமத்தில் பங்குகளை வாங்கி 78 ஆயிரம் கோடிகளை இழந்த பின்பும் மத்திய நிதியமைச்சரும், விசாரணை அமைப்புகளும் மௌனம் காப்பது ஏன் என காங்கிரஸ் கேள்வியெழுப்பியுள்ளது.

அதானி குழுமத்தின் கடுமையான மோசடிப் புகார்களை அமெரிக்க ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் அம்பலப்படுத்தியதாகவும், இந்தக் குழும நிறுவன பங்குகளின் மதிப்பில் 4.17 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் காங்கிரஸைச் சேர்ந்த ரந்தீப் சுர்ஜேவாலா தெரிவித்தார். இருப்பினும், எல்ஐசி மற்றும் எஸ்பிஐ, தொடர்ந்து அதானி குழுமத்தின் பங்குகளில் முதலீடு செய்வது ஏன் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் ட்விட்டரில் பதிவிட்டிருப்பதாவது: எல்ஐசி மற்றும் எஸ்பிஐ, தொடர்ந்து அதானி குழுமத்தின் பங்குகளில் முதலீடு செய்து வருகின்றன. எல்ஐசி என்பது பொதுமக்களின் பணம். ஹிண்டன்பர்க் அறிக்கைக்குப் பிறகும் ஏன் எல்ஐசி அதானி குழுமத்தில் 300 கோடி முதலீடு செய்ய வேண்டும்.

இந்த ஆய்வறிக்கை வெளியான பிறகு எஸ்பிஐ பங்குகள் 54 ஆயிரம் கோடிகள் குறைந்துள்ளது. இருந்தும், ஏன் எஸ்பிஐ, அதானி குழுமத்தில் 225 கோடி முதலீடு செய்துள்ளது. எதற்காக இவ்வாறு செய்ய வேண்டும்? இந்த விவகாரம் குறித்து ரிசர்வ் வங்கி, செபி, அமலாக்கத்துறை, சிபிஐ மற்றும் மத்திய நிதியமைச்சர் தொடர்ந்து மௌனம் காத்து வருகின்றனர். பிரதமர் இதற்கு விளக்கமளிக்க வேண்டும். நிதியமைச்சர் விரிவான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனப் பதிவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2ஆம் கட்ட வாக்குப்பதிவில் வாக்களித்த மக்களுக்கு நன்றி: பிரதமர் மோடி

அழகென்றால் அவள்தானா... ஷ்ரத்தா தாஸ்!

நித்திய கல்யாணி.. நிஹாரிகா!

பாரமுல்லா என்கவுன்டரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

டி20 உலகக் கோப்பையில் இவர்கள் இருவரும் வேண்டும்: சௌரவ் கங்குலி

SCROLL FOR NEXT