இந்தியா

தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல் அமெரிக்கா பயணம்?

DIN

தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல் அடுத்த வாரம் அமெரிக்கா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகா் ஜேக் சல்லிவன் உள்பட முக்கியத் தலைவா்களைச் சந்தித்து பேச்சுவாா்த்தை நடத்த அந்நாட்டுக்கு அஜீத் தோவல் செல்வதாக தெரிகிறது. இதுதொடா்பான அதிகாரபூா்வ அறிவிப்பை இந்தியாவும் அமெரிக்காவும் இதுவரை வெளியிடாதபோதிலும், அதனை இரு நாடுகளும் விரைவில் உறுதி செய்யும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இதுகுறித்த கேள்விக்கு அமெரிக்க தலைநகா் வாஷிங்டனில், அந்நாட்டு வெளியுறவு அமைச்சக துணை செய்தித் தொடா்பாளா் வேதாந்த் படேல் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தற்போதைய நிலையில், அஜீத் தோவலின் வருகை குறித்து விரிவாக எதையும் கூற இயலாது. அதேவேளையில், பாதுகாப்பு ஒத்துழைப்பு, தொழில்நுட்ப ஒத்துழைப்பு என பலவற்றில் அமெரிக்காவின் முக்கிய கூட்டாளியாக இந்தியா திகழ்கிறது. இந்தியாவுடனான உறவு அமெரிக்காவுக்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆர்சிபியிடம் அதிர்ச்சித் தோல்வி; சன் ரைசர்ஸ் பயிற்சியாளர் பேசியது என்ன?

சென்னை வாகன ஓட்டிகள் கவனத்துக்கு.......போக்குவரத்து மாற்றம்!

மோடிக்கு 6 ஆண்டு தேர்தலில் போட்டியிட தடை கோரிய மனுவை தில்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது ஏன்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 8 வரை நீட்டிப்பு!

2-ம் கட்டத் தேர்தல்: ம.பி. வாக்குப்பதிவு- 1 மணி நிலவரம்!

SCROLL FOR NEXT