இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு: 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை!

17th Jan 2023 11:55 AM

ADVERTISEMENT

 

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புத்காம் மாவட்டத்தில் உள்ள நீதிமன்ற வளாகம் அருகே பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச்சூட்டில் இரண்டு லஷ்கர் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். 

புத்காம் வழியாக பயங்கரவாதிகளின் நடமாட்டம் குறித்து ராணுவம் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்த தன்பேரில், சந்தேகத்துக்குரிய வாகனம் ஒன்றை நிறுத்த முயன்றனர். 

பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில், இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்று காவல் செய்தித் தொடர்பாளர் கூறினார். 

ADVERTISEMENT

படிக்க: சனிப்பெயர்ச்சி யாருக்கு கைகொடுக்கும்! என்ன சொல்கிறார் ஜோதிடர்?

கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் என்று காஷ்மீர் கூடுதல் காவல்துறை இயக்குநர் விஜய் குமார் தெரிவித்தார்.

பயங்கரவாதிகள் இருவரும் கடந்த வாரம் அருகிலுள்ள மாகம் பகுதியில் சுற்றிவளைத்த தேடுதல் நடவடிக்கையில் இருந்து தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. 

கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடமிருந்து ஒரு ஏகே ரைபிள் மற்றும் ஒரு கைத்துப்பாக்கி கைப்பற்றப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT