இந்தியா

அக்னிவீரர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்

DIN


புது தில்லி: மத்திய அரசு அறிமுகப்படுத்திய அக்னிவீரர்கள் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டிருக்கும் முதல் அக்னிவீரர்களின் குழுவினருடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார்.

இந்த நிகழ்ச்சியில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் ‘அக்னிபத்’ திட்டத்தை பாதுகாப்பு அமைச்சகம் அறிமுகப்படுத்தியது. இந்தத் திட்டத்தின் கீழ் ராணுவம், விமானப் படை, கடற்படை ஆகியவற்றில் 17.5 வயது முதல் 21 வயது கொண்டவா்கள் சோ்க்கப்படுவா். அவா்கள் பயிற்சி காலத்தையும் சோ்த்து 4 ஆண்டுகள் அக்னிவீரா்களாக முப்படைகளில் பணியாற்றுவா்.

2022ஆம் ஆண்டு தேர்வு செய்யப்படுவோருக்கு மட்டும் 23 வயது வரை விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் உள்பட பல்வேறு தரப்பிலும் இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு எழுந்த போதும், ஏராளமான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது.

இந்நிலையில், அக்னிவீரா்களுக்கான பயிற்சி ஜனவரி மாதத்தில் தொடங்கியது. மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் உள்ள பீரங்கி படை பயிற்சி மையத்தில் ஜனவரி 1-ஆம் தேதி 2,600 அக்னிவீரா்களுக்குப் பயிற்சி தொடங்கியது. பீரங்கி படைவீரா்கள், தொழில்நுட்ப உதவியாளா்கள், வானொலி ஆப்பரேட்டா்கள், ஓட்டுநா்களாக ராணுவத்தில் பணியாற்ற அவா்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும். மொத்தம் 31 வாரங்கள் அவா்கள் பயிற்சி மேற்கொள்ள உள்ளனா். இதில் 10 வாரங்கள் அடிப்படை பயிற்சியும், 21 வாரங்கள் மேம்பட்ட பயிற்சியும் அளிக்கப்படும் என்று பயிற்சி மையத்தின் லெப்டினன்ட் கா்னல் எஸ்.கே. பாண்டா தெரிவித்திருந்தார்.

ஜாா்க்கண்டில்...: ஜாா்க்கண்ட் மாநிலம் ராம்கா் மாவட்டத்தில் உள்ள பஞ்சாப் படைப்பிரிவு மையத்தில் 217 அக்னிவீரா்களுக்கு ஜனவரி 2-ஆம் தேதி பயிற்சி தொடங்கியது. இதில் வீரா்களின் உடல் மற்றும் மன உறுதியை அதிகரிக்கும் பயிற்சிகள் இடம்பெற்றுள்ளதாக அந்தப் படைப்பிரிவு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வ.உ.சிதம்பரம் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

தூத்துக்குடியில் திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

சாத்தான்குளம் பேருந்து நிலையத்தில் நிழற்குடையின்றி தவிக்கும் மக்கள்

சுரண்டையில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT