இந்தியா

விசாகப்பட்டினத்தில் வந்தே பாரத் ரயிலின் மீது கல் வீசி தாக்குதல்!

12th Jan 2023 01:29 PM

ADVERTISEMENT

 

விசாகப்பட்டினத்தில் வந்தே பாரத் ரயில் பெட்டியின் மீது அடையாளம் தெரியாத நபர்கள் கற்களை வீசி தாக்கியதில் கண்ணாடி ஜன்னல்கள் உடைந்ததாக போலீஸார் தெரிவித்தனர். 

செகந்திராபாத் மற்றும் விசாகப்பட்டினம் இடையேயான அதிவேக விரைவு ரயிலை பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 15-ஆம் தேதி கொடியசைத்துத் தொடங்கி வைக்க உள்ளார். 

ரயில் பாதுகாப்புப் படையினரின் முதற்கட்ட விசாரணையில், 

ADVERTISEMENT

புதன்கிழமை இரவு காஞ்சரபாலத்தில் உள்ள கோச் வளாகத்தின் அருகே மர்ம நபர்கள் சிலர் ரயில் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியிருக்கலாம். இதனால் ரயில் பெட்டியின் கண்ணாடி உடைந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. 

படிக்க: முடிவுக்கு வந்தது வடகிழக்குப் பருவமழை!

பராமரிப்பு சோதனைக்காக வந்தே பாரத் ரயில் புதன்கிழமை சென்னையிலிருந்து விசாகப்பட்டினம் வந்தது. விசாகப்பட்டினம் வந்தவுடன், ரேக் கஞ்சரபாலத்தில் உள்ள புதிய கோச் வளாகத்திற்கு மாற்றப்பட்டது. அங்கு இந்த சம்பவம் நிகழ்ந்தாக  போலீஸார் தெரிவித்தனர். 

இந்த  சம்பவம் குறித்து விசாகப்பட்டினம் போலீஸார் மற்றும் ஆர்பிஎப் விசாரணை மேற்கொண்டு வருகின்றது. ஒரு ஜன்னல் கண்ணாடி முழுவதுமாக உடைந்த நிலையில், மற்றொரு கண்ணாடியில் சிறிய விரிசல் ஏற்பட்டுள்ளது.

குற்றத்தை செய்த நபர்களைத் தேடி வருவதாக உள்ளூர் போலீஸ் அதிகாரி தெரிவித்தார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT