இந்தியா

செகந்திராபாத் - விசாகப்பட்டினம் இடையே வந்தே பாரத்; ஜன.15ல் தொடக்கி வைக்கிறார் பிரதமர்

12th Jan 2023 11:59 AM

ADVERTISEMENT


ஹைதராபாத்: செகந்திராபாத் - விசாகப்பட்டினம் இடையேயான வந்தே பாரத் ரயிலை, காணொலி வாயிலாக ஜன. 15ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்துத் தொடக்கி வைக்கிறார் என்று மத்திய சுற்றுலா துறை அமைச்சர் ஜி கிஷண் ரெட்டி தெரிவித்துள்ளார்.

இந்த துவக்கவிழாவின் போது, செகந்திராபாத் ரயில் நிலையத்தில், ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், மற்றும் கிஷண் ரெட்டி ஆகியோர் பங்கேற்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க.. 51 நாள்கள்.. 27 ஆறுகள்.. உலகின் மிகப்பெரிய சொகுசுப் படகு பற்றிய ஆச்சரிய தகவல்கள்

சங்ராந்தியை முன்னிட்டு, தெலுங்கு மக்களுக்கு பரிசளிக்கும் வகையில், ஜனவரி 15ஆம் தேதி காலை 10 மணிக்கு, வந்தே பாரத் ரயில் தொடக்க விழா நடைபெறவிருக்கிறது. செகந்திராபாத் - விசாகப்பட்டினம் ரயில், நாட்டில் இயக்கப்படவிருக்கும் எட்டாவது வந்தே பாரத் ரயிலாகும்.

ADVERTISEMENT

இதையும் படிக்க.. துணிவு வெறும் ஆக்ஷன் படம் மட்டும்தானா..? - திரை விமர்சனம்

இவ்விரு ரயில் நிலையங்களையும் எட்டு மணி நேரத்தில் இந்த ரயில் சென்றடையும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் நிலையங்களுக்கு இடையே வாரங்கல், கம்மம், விஜயவாடா, ராஜமுந்திரி ஆகிய முக்கிய ரயில் நிலையங்களில் ரயில் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT