இந்தியாவின் எண்ம பணப்பரிமாற்ற தளமான யுபிஐ மற்றும் சிங்கப்பூரின் பே நௌ ஆகியவை இணைக்கும் பணி தொடங்கியது. இதனை பிரதமர் நரேந்திர மோடி, சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் முன்னிலையில் தொடங்கி வைக்கப்பட்டது.
எண்ம பரிவர்த்தனைனை முன்னெடுத்திருக்கும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, அடுத்த நடவடிக்கையாக, வெளிநாட்டு எண்ம பரிவர்த்தனை தளங்களை இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
இதையும் படிக்க.. சென்னைக்கு அருகே நீர்வீழ்ச்சி: மீண்டும் திறக்கப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சி
முதல்கட்டமாக இந்தியாவின் யுபிஐ மற்றும் சிங்கப்பூரின் பேநௌ தளங்கள் இணைக்கப்படுகின்றன. இதன் மூலம் சிங்கப்பூரில் வாழும் இந்தியர்கள், இந்தியாவில் வாழும் சிங்கப்பூர் மக்கள் பயனடைவார்கள் என்று கூறப்படுகிறது.
எண்ம பரிவர்த்தனை செயலிகள் மூலம், மக்கள், பணப்பரிமாற்றத்துக்கு தங்களது வங்கிக் கணக்கு தொடர்பான விவரங்களை அளிக்க வேண்டிய அபாயத்திலிருந்து தடுக்கப்பட்டனர். பணம் நேரடியாக ஒரு வங்கிக் கணக்கிலிருந்து மற்றொரு வங்கிக் கணக்குக்கு நாள் முழுவதும் எந்த நேரத்திலும் தங்கு தடையின்றி செல்ல வாய்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
இதையும் படிக்க.. சினிமா பாணியில்.. ஜாகுவாரில் சென்னை வந்து 1000 ரூபாய், காலணிகளை திருடிய கொள்ளையர்கள்
பே நௌ, சிங்கப்பூரில் மிக வேகமாக இயங்கும் எண்ம பரிமாற்ற தளமாக உள்ளது. இந்த நிலையில்தான் யுபிஐ மற்றும் பேநௌ இணைக்கப்படுகிறது. இதன் மூலம் வெளிநாட்டு வங்கிக் கணக்குக்கு பணம் அனுப்பும் போது நேரிடும் கூடுதல் செலவு தவிர்க்கப்படும். குறைந்த கட்டணத்தில், விரைவாக, எந்த நேரத்திலும் பணம் அனுப்ப வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.