இந்தியா

ராகுல் காந்தி பேசியதை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்! பாஜக

8th Feb 2023 11:58 AM

ADVERTISEMENT

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பேசியதை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று நாடாளுமன்ற விவகார அமைச்சர் பிரகலாத் ஜோஷி வலியுறுத்தியுள்ளார்.

குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உரை மீதான விவாதம் நேற்று மக்களவையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற ராகுல் காந்தி, தொழிலதிபர் அதானி மற்றும் பிரதமர் நரேந்திர மோடி குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

இந்நிலையில், இன்று மக்களவை கூடியவுடன் ராகுல் காந்திக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் வழங்க வேண்டும் என்று பாஜக எம்பிக்கள் கோரிக்கை வைத்தனர்.

இதையும் படிக்க | 2014-க்குப் பிறகு அதானியின் வளர்ச்சியில் மாய வித்தை: மக்களவையில் ராகுல் பேச்சு

இதுகுறித்து மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி பேசியதாவது:

ADVERTISEMENT

பாஜக குறித்து ராகுல் காந்தி கூறிய குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறானவை. எவ்வித ஆதாரமும் இன்றி ராகுல் காந்தி உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகளை பேசியுள்ளார். ராகுல் காந்தி பேசிய கருத்துகளை அவைக் குறிப்பிலிருந்து நீக்கி, அவருக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் வழங்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT