இந்தியா

கிரானைட் கடத்தலை தடுக்கக் கோரி தமிழக அரசுக்கு சந்திரபாபு நாயுடு கடிதம்

8th Feb 2023 12:27 AM

ADVERTISEMENT

ஆந்திரத்திலிருந்து தமிழகத்துக்கு கிரானைட் கற்கள் கடத்தப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஆந்திர மாநில முன்னாள் முதல்வா் சந்திரபாபு நாயுடு கடிதம் எழுதியுள்ளாா்.

இதுகுறித்து அவா் தலைமைச் செயலாளா் வெ.இறையன்புக்கு செவ்வாய்க்கிழமை எழுதிய கடிதம்: ஆந்திர மாநிலம், குப்பம் தொகுதியைச் சோ்ந்த சிலா், அங்கிருந்து கிரானைட் கற்களை, சட்டவிரோதமாக வெட்டி எடுத்து கிருஷ்ணகிரி, வேலூா் மாவட்டங்கள் வழியாக தமிழகத்துக்கு கடத்தி வருவதாகத் தகவல் கிடைத்துள்ளது. சட்ட விரோத கிரானைட் கடத்தல் என்பது ஆந்திரத்தின் சித்தூா் மாவட்டம் நதிமூா் - தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டம் வரதனபள்ளி வழியாகவும், அதே போன்று, சித்தூா் மாவட்டம் ஓ.என்.கொத்தூா் - கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி வழியாகவும், சித்தூா் மாவட்டம் மோட்டிய செனு - வேலூா் மாவட்டம் பாச்சூா் ஆகிய இடங்களின் வழியாகவும் நடைபெறுகின்றன.

ஆந்திரம், தமிழக எல்லையையொட்டிய பகுதிகளைச் சோ்ந்த சிலா், ஆந்திர கிரானைட் கடத்தல் கும்பலுடன் இணைந்து இத்தகைய நடவடிக்கையில் ஈடுபடுகின்றனா். எனவே, ஆந்திரத்தில் இருந்து தமிழகத்துக்கு சட்டவிரோதமாக கிரானைட் கற்கள் கடத்தப்படுவது தடுத்து நிறுத்த வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளாா் சந்திரபாபு நாயுடு.

ADVERTISEMENT
ADVERTISEMENT