இந்தியா

வந்துவிட்டது வந்தே பாரத்! ருசிக்கத் தயாராகும் மகாராஷ்டிர மக்கள்

DIN

பிரதமர் நரேந்திர மோடி, பிப்ரவரி 10ஆம் தேதி மும்பை - சோலாபூர் மற்றும் மும்பை - ஷீரடி இடையே இரண்டு வந்தே பாரத் ரயில்களை தொடக்கி வைக்கவிருக்கிறார்.

அண்மையில், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கி சோதனை செய்யப்பட்டது.  உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட புதிய அதிகவேக ரயில் எஞ்ஜின்களைக் கொண்ட வந்தேபாரத் ரயில் மலைப்பாங்கான பகுதிகளிலும் எந்த சிக்கலும் இல்லாமல் இயங்கியது மிகுந்த பாராட்டுகளைப் பெற்றது.

இந்த வந்தேபாரத் ரயில் மூலம், மும்பையிலிருந்து ஷீரடி கோயிலுக்கும், மும்பையிலிருந்து புனே வழியாக சோலாப்பூருக்கும் மிக விரைவாக மக்கள் சென்றடையலாம். இந்த ரயில் சேவை தொடங்கியதும் வந்தே பாரத் ரயில் பயண அனுபவத்தை மகாராஷ்டிர மக்கள் அனுபவிக்கத் தொடங்கி வருகிறார்கள்.

இதனுடன், மிக அருமையான மகாராஷ்டிர மாநில பாரம்பரிய சுவையான உணவுகளும் சுவைக்கக் கிடைக்கும் என்பது கூடுதல் தகவல்.

வந்தே பாரத் ரயிலில், பயணிக்கும் பயணிகளுக்கு காலை உணவாக அவர்களது பாரம்பரிய ஜவ்வரிசி கிச்சடி, ரொட்டி, அடை ஆகியவை வழங்கப்படும்.

நிலக்கடலை புலாவ், ரொட்டி வகைகள், பருப்பு (டால்) அல்லது பட்டாணி மசாலா, பருப்பு உசிளி மற்றும் காய்கறிகளுடன் கொண்ட சாப்பாடு மதிய உணவாக வழங்கப்படும்.

சைவப் பிரியர்களுக்கும் அவர்களுக்குப் பிடித்த உணவுகள் இடம்பெற்றுள்ளன. கோழிக்கறியில் பல வகையான பாரம்பரிய மணத்துடன் வந்தே பாரத் ரயிலில் பயணிகளுக்கு வழங்கப்படவிருக்கிறது.

இந்த உணவுப் பட்டியலில் சிறுதானிய உணவுகளுக்கு சிறப்பிடம் கொடுக்கப்பட்டுள்ளது. மாலை நேரத்து மயக்கத்தைப் போக்க ஜவ்வரிசி வடை, கச்சோரி, கட்லெட், பருப்பு அடைகளும் சுடச்சுட பரிமாறப்படுமாம்.

இவ்விரு ரயில்களும் 10ஆம் தேதி முதல் பயணத்தைத் தொடங்குகின்றன. இந்த வந்தே பாரத் ரயில்கள், ஒரு விமானப் பயணத்தின் அனுபவத்தைத் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் இருக்கும் எக்சிக்யூட்டிவ் நாற்காலி 180 கோணத்தில் திரும்பும் வசதியுடன் இருக்குமாம். அனைத்து ரயில் பெட்டிகளிலும் 32 இன்ச் ஸ்கிரீனில் பயணிகளுக்கு அனைத்துத் தகவல்களும் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

SCROLL FOR NEXT