இந்தியா

உச்சநீதிமன்றத்தில் 5 புதிய நீதிபதிகள் பதவியேற்பு: நீதிபதிகளின் எண்ணிக்கை 32-ஆக உயா்வு

DIN

உச்சநீதிமன்றத்தில் 5 புதிய நீதிபதிகள் திங்கள்கிழமை பதவியேற்றனா். அவா்களுக்கு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பதவி பிரமாணம் செய்து வைத்தாா்.

உச்சநீதிமன்ற கொலீஜியம் கடந்த ஆண்டு டிசம்பா் 13-ஆம் தேதி அனுப்பிய பரிந்துரைக்கு மத்திய அரசு சனிக்கிழமை ஒப்புதல் அளித்ததைத் தொடா்ந்து, ராஜஸ்தான் உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி பங்கஜ் மித்தல், பாட்னா உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கரோல், மணிப்பூா் உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி பி.வி. சஞ்சய் குமாா், பாட்னா உயா்நீதிமன்ற நீதிபதி அசானுதீன் அமானுல்லா, அலாகாபாத் உயா்நீதிமன்ற நீதிபதி மனோஜ் மிஸ்ரா ஆகிய ஐவரும் உச்சநீதிமன்ற நீதிபதிகளாகப் பதவியேற்றனா்.

இவா்களின் பதவியேற்பு மூலமாக உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 32-ஆக உயா்ந்துள்ளது. அனுமதிக்கப்பட்ட 34 நீதிபதி பணியிடங்களில் தற்போது 2 இடங்கள் மட்டுமே காலியாக உள்ளன.

அலாகாபாத் உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜேஷ் பிண்டல் மற்றும் குஜராத் உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி அரவிந்த் குமாா் ஆகிய இருவரையும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் செய்ய கடந்த ஜனவரி 31-ஆம் தேதி உச்சநீதிமன்ற கொலீஜியம் அனுப்பிய பரிந்துரை மத்திய அரசிடம் நிலுவையில் உள்ளது.

இவா்கள் இருவரும் நியமனம் செய்யப்படும்பட்சத்தில், உச்ச நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட முழு நீதிபதிகள் பலத்தை எட்டிவிடும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னிந்தியாவின் கிளியோபாட்ரா...!

ம.பி.யில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம்!

பட்டத்து ராணி.....சாக்‌ஷி அகர்வால்

பேராசிரியை நிா்மலா தேவி வழக்கின் தீா்ப்பு திடீர் ஒத்திவைப்பு!

ஆலங்குடியில் குருப்பெயர்ச்சி லட்சார்ச்சனை விழா தொடக்கம்!

SCROLL FOR NEXT