இந்தியா

இந்த கிராமத்தில் பால் விற்பனைக்குத் தடை! ஏன் தெரியுமா?

டாக்டர். ஆர்.செல்வன்

ஆந்திரத்தில் உள்ள ஒரு கிராமத்தில் சுமார் 600 வீடுகளில் பசு/எருமை இருந்தும் யாருக்கும் பால் விற்பதில்லையாம்! 

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் கஞ்சனஹள்ளியில் சுமார் 1,200 குடும்பங்கள் உள்ளன. இவற்றில் பாதி குடும்பங்களுக்கு ஒரு பசு அல்லது எருமை சொந்தமாக உள்ளன. 

இதில் ஆச்சரியமான செய்தி என்னவென்றால் இவர்களில் ஒருவர் கூட பால் விற்பதில்லை. ஏன், அந்த கிராமத்தில் உள்ள டீக்கடைகளுக்குக் கூட காசுக்கு பால் விற்பனை செய்வதில்லை. மாறாக, கிராமத்தில் தேவைப்படும் மற்றவர்களுக்கு பாலை இலவசமாகக் கொடுக்கிறார்கள் இந்த கிராம மக்கள். இங்கு பால் விற்பனைக்குத் தடை என்றுகூட சொல்லலாம்!

இதற்கான காரணம் என்னவென்று கேட்டால், மாடுகளை விவசாயத்திற்கு மட்டுமே பயன்படுத்தவும் ஒருபோதும் பால் விற்கக்கூடாது என்றும் நூற்றாண்டுகளுக்கு முன்பு சத்குரு மகாத்மா பதே சாஹேப் என்பவர் வலியுறுத்தியுள்ளார். அதையே இன்று வரை இந்த கிராம மக்கள் பின்பற்றி வருகின்றனர். சத்குருவின் தர்காவை இன்றும் பலரும் பூஜிக்கின்றனர். 

இதனிடையே சத்குருவின் அறிவுறுத்தலை மதிக்காமல் ஒருவர் பால் விற்பனை செய்யவே, சில நாள்களில் அவர் மர்மமான முறையில் இறந்ததாக அந்த கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கட்டப்பகாரி தேவேந்திரன் கூறுகிறார். மேலும், அன்றிலிருந்து அங்கு யாரும் பால் விற்பனை பற்றி யோசிப்பதுகூட இல்லையாம்! 

தேவேந்திரனுக்கு ஒரு பசு, எருமை உள்ளது. தினமும் மூன்று லிட்டர் பாலில் ஒரு லிட்டர் பாலை அண்டை வீட்டாருக்கு கொடுக்கிறார். இந்த கிராம மக்கள் முழுவதும் இதே முறையைத்தான் பின்பற்றுகிறார்கள். 

கஞ்சனஹள்ளியில் தினமும் சராசரியாக 1,000 லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

நூற்றாண்டுகளுக்கு முன்பு சத்குரு கூறியதை இன்றுவரை கடைப்பிடிக்கும் இந்த மக்கள் உண்மையில் மனிதநேயத்திற்கு எடுத்துக்காட்டாக இருக்கின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2-ம் கட்ட மக்களவைத் தேர்தல்: 11 மணி நிலவரம்

பயமோ, வருத்தமோ இல்லாமல் கட்டப்பஞ்சாயத்து நடக்கிறது: விஷாலின் அதிரடி பதிவு!

மக்களவை 2-ம் கட்ட தேர்தல்: கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்ட கூகுள்!

இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து: பாஜக நிர்வாகி பலி

தென்னிந்தியாவின் கிளியோபாட்ரா...!

SCROLL FOR NEXT