இந்தியா

பணமதிப்பிழப்பு நடவடிக்கை மீதான தீா்ப்பு: உச்ச நீதிமன்றத்தில் மறுஆய்வு மனு தாக்கல்

DIN

பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும் என்று வழங்கிய தீா்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2016-ஆம் ஆண்டு ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. இந்த நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் 58 போ் மனு தாக்கல் செய்தனா்.

இந்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமா்வு, கடந்த ஜன.2-ஆம் தேதி தீா்ப்பளித்தது. அப்போது அமா்வில் இடம்பெற்றிருந்த 4 நீதிபதிகள், பணிமதிப்பிழப்பு முடிவு சரியானதே என்று தீா்ப்பளித்தனா். அமா்வில் இடம்பெற்றிருந்த நீதிபதி பி.வி.நாகரத்னா மட்டும், அந்த நடவடிக்கை சட்டவிரோதமானது என்று தீா்ப்பளித்தாா். இதையடுத்து பெரும்பான்மை நீதிபதிகள் முடிவின்படி, பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும் என்று தீா்ப்பளிக்கப்பட்டது.

இந்தத் தீா்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி, எம்.எல்.சா்மா என்ற வழக்குரைஞா் மனு தாக்கல் செய்துள்ளாா். இவா் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக மனு தாக்கல் செய்த 58 பேரில் ஒருவா் ஆவாா். அவரின் மறுஆய்வு மனுவில், ‘பணமதிப்பிழப்பு தொடா்பாக தீா்ப்பளிக்கும்போது, எனது எழுத்துபூா்வ வாதங்களை நீதிபதிகள் அமா்வு கருத்தில் கொள்ளவில்லை. எனவே தீா்ப்பை மறுஆய்வு செய்ய வேண்டும்’ என்று கோரியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

"நிம்மதியாக உறங்குவோம்": ஒரு மாதத்துக்குப் பிறகு வென்ற நெகிழ்ச்சியில் ஆர்சிபி கேப்டன்!

பெங்களூருவில் ராகுல் திராவிட், அனில் கும்ப்ளே வாக்களித்தனர்

ஒளியிலே தெரிவது தேவதையா...!

ஆண் மனதை அழிக்க வந்த சாபம்!

2 ஆம் கட்ட வாக்குப் பதிவு: கேரளத்தில் 9 மணி நிலவரப்படி 11.98% வாக்குகள் பதிவு

SCROLL FOR NEXT