இந்தியா

பெங்களூரு - மைசூரு விரைவுச் சாலைக்கு பெயர் வைப்பதில் குழப்பம்

DIN

பெங்களூரு: கர்நாடகத்துக்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இன்னும் ஒரு சில மாதங்களே இருக்கும் நிலையில், 119 கிலோ மீட்டர் தொலைவுள்ள பெங்களூரு - மைசூரு விரைவுச் சாலைக்கு பெயர் வைப்பதில் அரசியல் கட்சிகள் அதிக ஆர்வம் காட்டி வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விரைவில் இந்த விரைவுச் சாலை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறந்துவிடப்படவிருக்கிறது. இது பெங்களூரு, ராமநகர், மாண்டியா, மைசூரு மாவட்டங்களை இணைக்கவிருக்கிறது. இப்பகுதிகளில் இருக்கும் அதிகப்படியான சமுதாய மக்கள் வொக்காலிகா. இவர்களின் வாக்குகளை கவரும் வகையில் பெயரைச் சூட்ட பாஜக திட்டமிட்டுள்ளது.

இவர்கள் வழக்கமாக காங்கிரஸ் அல்லது ஜனதா தளத்துக்கு வாக்களிப்பவர்களாக இருக்கிறார்கள். எனவே, இவர்களை வாக்கு வங்கியை தம் பக்கம் திருப்ப, விரைவுச் சாலைப் பெயரை மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பாஜக நினைப்பதில் எந்த தவறும் இல்லை என்றே கூறுகிறார்கள்.

ஆனால், இதுவரை எந்தப் பெயரும் உறுதி செய்யப்படவில்லை என்றும், பெயரை தேர்வு செய்வதில் பலகட்ட ஆலோசனைகள் நடப்பதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரா துப்பாக்கி சுடுதல்: மோனாவுக்கு தங்கம்

சேவைகளைக் கட்டுப்படுத்தும் விவகாரம் மத்திய சட்டத்திற்கு எதிரான தில்லி அரசின் மனுவை பட்டியலிட பரிசீலிக்கப்படும்: உச்சநீதிமன்றம் உறுதி

மேயா், துணை மேயா் பதவிக்கான தோ்தலை நடத்த ஆம் ஆத்மி கட்சிதான் விரும்பவில்லை: எதிா்க்கட்சித் தலைவா் ராஜா இக்பால் சிங்

மேயா் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டதால் தில்லி மாநகராட்சிக் கூட்டத்தில் சலசலப்பு

உலகக் கோப்பை வில்வித்தை: இந்தியாவுக்கு 4-ஆவது பதக்கம் உறுதி

SCROLL FOR NEXT