இந்தியா

அதானி குழும பங்குகளின் வீழ்ச்சி.. எட்டாவது நாளில்

6th Feb 2023 06:01 PM

ADVERTISEMENT

 

புது தில்லி : அதானி குழுமத்தின் நிறுவனப் பங்குகள் இன்றும் 5 முதல் 10 சதவிகித வீழ்ச்சியை சந்தித்தன. அதானி குழும பங்குகள்  தொடர்ச்சியாக அதிகளவில் விற்பனைக்கு வரும் அழுத்தம் காரணமாக எட்டாவது நாளாக இந்த சரிவை அடைந்துள்ளது.

திங்கள்கிழமை காலை வணிகம் தொடங்கியது முதல், அதானி குழுமத்தின் நிறுவனப் பங்குகள் ஒன்றன் பின் ஒன்றாக சரிவடையத் தொடங்கின.

அதானி குழுமத்தில் தாங்கள் செய்திருக்கும் முதலீடுகள் தொடர்பாக வங்கிகளும், ஆயுள் காப்பீட்டுக் கழகமும் தகவல் அளிக்கும்படி இந்திய ரிசர்வ் வங்கி கேட்டிருந்தது. 

ADVERTISEMENT

திங்கள்கிழமை அதானி என்டர்பிரைசஸ் நிறுவனப் பங்குகள் மும்பை பங்குச் சந்தையில் 10 சதவிகித சரிவை அடைந்து ரூ.1,434 விலையாக இருந்தது. அதானி டோட்டல் காஸ், அதானி க்ரீன், அதானி டிரான்மிஷன், அதானி வில்மர், அதானி பவர், என்டிடிவி ஆகிய ஆறு  நிறுவனப் பங்குகள் 5 முதல் 10 சதவிகித சரிவைக் கண்டன. அதானி போர்ட்ஸ் 1 சதவீதம் விலை உயர்வைக் கண்டது.

இன்றைய வணிகத்தில், அதானி குழும பங்குகள் கிட்டத்தட்ட ரூ.10 லட்சம் கோடி இழப்பை சந்தித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
 

Tags : adani group
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT