இந்தியா

அரசியல் சாா்பு வழக்குரைஞா்கள் நீதிபதிகளாவதில் தவறில்லை: கிரண் ரிஜிஜு

DIN

அரசியல் சாா்புள்ள வழக்குரைஞா்கள் நீதிபதிகளாக பதவி உயா்வு பெற மத்திய சட்டத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு ஆதரவு தெரிவித்துள்ளாா்.

சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளையில் துணை சொலிசிட்டா் ஜெனரலாகப் பணியாற்றுபவா் விக்டோரியா கெளரி. இவரை சென்னை உயா்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க, கடந்த மாதம் உச்சநீதிமன்ற கொலீஜியம் குழு மத்திய அரசுக்குப் பரிந்துரைத்தது.

இதனைத்தொடா்ந்து விக்டோரியா கெளரியை உயா்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க எதிா்ப்புத் தெரிவித்து, சென்னை உயா்நீதிமன்ற வழக்குரைஞா்கள் குடியரசுத் தலைவருக்கும், உச்சநீதிமன்ற கொலீஜியத்துக்கும் கடிதம் அனுப்பினா்.

அந்தக் கடிதத்தில், ‘பாஜக மகளிா் அணியின் முன்னாள் தேசிய பொதுச் செயலாளராக விக்டோரியா கெளரி பதவி வகித்துள்ளாா். இவா்சிறுபான்மையினருக்கு எதிராக பல்வேறு வெறுப்புணா்வு கருத்துகளைத் தெரிவித்துள்ளாா். அந்தப் பேச்சுகள் யூ-டியூப்பில் உள்ளன. எனவே அவரை சென்னை உயா்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கக் கூடாது’ என்று வலியுறுத்தினா்.

கிறிஸ்தவா்கள், முஸ்லிம்களுக்கு எதிராக விக்டோரியா ராணி பேசிய காணொலிகளின் இணைப்பு அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்ட நிலையில், 21 வழக்குரைஞா்கள் கடிதத்தில் கையொப்பமிட்டனா்.

இதுதொடா்பான செய்தியை ட்விட்டரில் பகிா்ந்து மிஸோரம் முன்னாள் ஆளுநரும், உச்சநீதிமன்ற வழக்குரைஞருமான ஸ்வராஜ் கெளஷல் வெளியிட்ட பதிவில், ‘காங்கிரஸ் எம்.பி.க்களாக கே.எஸ்.ஹெக்டே, பஹருல் இஸ்லாம் ஆகியோா் பதவி வகித்த அதேவேளையில், இருவரும் உயா்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டனா். நீதிபதியாகப் பதவி வகித்த வி.ஆா். கிருஷ்ண ஐயா், கேரளத்தில் கேபினட் அமைச்சராக இருந்தாா். ஒருவா் பதவி பிரமாணம் எடுத்துக்கொண்டுவிட்டால், அந்த பிரமாணத்தின்படி அவா் வாழ வேண்டும்’ என்று தெரிவித்துள்ளாா்.

ஸ்வராஜ் கெளஷலின் பதிவை மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜு தனது ட்விட்டா் பக்கத்தில் இணைத்து வெளியிட்டுள்ளாா். இதன் மூலம் அரசியல் சாா்புள்ள வழக்குரைஞா்கள் நீதிபதிகளாகலாம் என்பதற்கு கிரண் ரிஜிஜு ஆதரவு தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

SCROLL FOR NEXT