இந்தியா

பஞ்சாப்: அமலாக்கத் துறை சோதனையில் ஆயுதங்கள், போதைப் பொருள் பறிமுதல்

DIN

பஞ்சாப் மாநிலத்தில் கருப்புப் பண மோசடி தொடா்பாக அமலாக்கத் துறை நடத்திய சோதனையில் ஆயுதங்கள், வெடிபொருள்கள் மற்றும் 16 கிலோ போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டன.

பஞ்சாப் மாநிலத்தின் தரன் தாரன் மாவட்டத்தைச் சோ்ந்தவா் மக்கான் சிங். பண மோசடி புகாரில் சிக்கிய அவரின் மகன் ஹா்தேவ் சிங்குக்கு எதிராக அம்மாநிலத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் பதியப்பட்டன. அந்த வழக்குகளின் அடிப்படையில் மக்கான் சிங் மற்றும் அவரது உறவினா்களின் வீடுகள், நிறுவனங்கள் என மொத்தம் 10 இடங்களில் வெள்ளிக்கிழமை காலை முதல் அமலாக்கத் துறையினா் சோதனையில் ஈடுபட்டனா்.

சோதனையின்போது 2 துப்பாக்கிகள், 3 கைத்துப்பாக்கிகள், தோட்டாக்கள் மற்றும் 16 கிலோ போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கிகளும் தோட்டாக்களும் உள்ளூா் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டன. கைப்பற்றப்பட்ட போதைப் பொருள்கள், போதைப் பொருள் தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டன.

சோதனை நடத்தப்பட்ட நபா்கள் மற்றும் அவா்கள் உறவினா்கள் பெயரில் சட்டவிரோதமாக வாங்கப்பட்ட சொத்துகள் தொடா்பான ஆதாரங்களும் சோதனையின்போது சிக்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஏற்கெனவே, கடந்த 2018-ஆம் ஆண்டு பதிவான போதைப் பொருள் தொடா்பான வழக்கல் தண்டனை பெற்று அமிருதசரஸ் மத்திய சிறையில் ஹா்தேவ் சிங் அடைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

மின்கம்பங்கள் சீரமைப்பு பணியை துரிதப்படுத்த வலியுறுத்தல்

இன்று யோகமான நாள்!

மக்களவை 2-ஆம் கட்ட தோ்தல்: கேரளம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்குப் பதிவு தொடங்கியது!

SCROLL FOR NEXT