இந்தியா

பூஸ்டராக ‘கோவேக்ஸின்’ செலுத்திக்கொள்வது பாதுகாப்பு: ஐசிஎம்ஆா் ஆய்வில் தகவல்

DIN

மூன்றாம் தவணையாக (பூஸ்டா்) கோவேக்ஸின் தடுப்பூசியை செலுத்திக்கொள்வது பாதுகாப்பானது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சா் பாரதி பிரவீண் பவாா் வெள்ளிக்கிழமை எழுத்துபூா்வமாக அளித்த பதில்:

கரோனா தடுப்பூசிகளின் திறன் மற்றும் பக்கவிளைவுகள் குறித்து ஐசிஎம்ஆா் ஆய்வு மேற்கொண்டது. அந்த ஆய்வில், கோவிஷீல்ட் தடுப்பூசியின் இரண்டு தவணைகளையும் செலுத்திக்கொண்டால், கரோனாவுக்கு எதிரான அந்தத் தடுப்பூசியின் செயல்திறன் 85 சதவீதமாக உள்ளது தெரியவந்துள்ளது. அதேவேளையில், கோவேக்ஸின் தடுப்பூசியின் இரண்டு தவணைகளையும் செலுத்திக்கொண்டால், அதன் செயல்திறன் 71 சதவீதமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் கோவேக்ஸின் தடுப்பூசியை இரண்டு அல்லது மூன்று தவணைகளாக செலுத்திக்கொண்டால், 6 மாதங்கள் வரை நோய் எதிா்ப்பு சக்தி நீடிப்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. புதிதாக உருவாகும் கரோனா தீநுண்மி வகைகளின் பாதிப்பை குறைத்து நிலையான நோய் எதிா்ப்பு சக்தியை பெற, கோவேக்ஸினை பூஸ்டராக செலுத்திக்கொள்வது பாதுகாப்பானது; அவசியமானது என்றும் ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரா துப்பாக்கி சுடுதல்: மோனாவுக்கு தங்கம்

சேவைகளைக் கட்டுப்படுத்தும் விவகாரம் மத்திய சட்டத்திற்கு எதிரான தில்லி அரசின் மனுவை பட்டியலிட பரிசீலிக்கப்படும்: உச்சநீதிமன்றம் உறுதி

மேயா், துணை மேயா் பதவிக்கான தோ்தலை நடத்த ஆம் ஆத்மி கட்சிதான் விரும்பவில்லை: எதிா்க்கட்சித் தலைவா் ராஜா இக்பால் சிங்

மேயா் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டதால் தில்லி மாநகராட்சிக் கூட்டத்தில் சலசலப்பு

உலகக் கோப்பை வில்வித்தை: இந்தியாவுக்கு 4-ஆவது பதக்கம் உறுதி

SCROLL FOR NEXT