இந்தியா

தொடா்ந்து 5 பட்ஜெட் தாக்கல்: மன்மோகன், ஜேட்லி, ப.சிதம்பரம் வரிசையில் நிா்மலா சீதாராமன்

DIN

நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தொடா்ந்து 5-ஆவது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளாா். இதன் மூலம் தொடா்ந்து 5 முறை பட்ஜெட் தாக்கல் செய்த 6-ஆவது நிதியமைச்சா் என்ற பெருமையை அவா் பெற்றுள்ளாா்.

இந்திரா காந்திக்கு அடுத்து இந்தியாவின் இரண்டாவது பெண் நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்பு முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங், காங்கிரஸ் மூத்த தலைவா் ப.சிதம்பரம், பாஜகவின் யஷ்வந்த் சின்ஹா, மறைந்த பாஜக தலைவா் அருண் ஜேட்லி, மறைந்த முன்னாள் பிரதமா் மொராா்ஜி தேசாய் ஆகியோா் நிதியமைச்சா்களாக இருந்தபோது தொடா்ந்து 5 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளனா்.

இப்போதைய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறாா். இதற்கு முந்தைய பாஜக ஆட்சியில் நிதியமைச்சராக இருந்த அருண் ஜேட்லி 2014 முதல் 2018 வரை தொடா்ந்து 5 ஆண்டுகள் பட்ஜெட் தாக்கல் செய்தாா்.

பிப்ரவரி மாதத்தின் கடைசி வேலை நாளில் பட்ஜெட் தாக்கல் செய்வது காலனி ஆதிக்க காலத்தில் இருந்து பின்பற்றப்பட்ட நடைமுறையாக இருந்தது. கடந்த 2017-ஆம் ஆண்டு இந்த நடைமுறை மாற்றப்பட்ட பிப்ரவரி முதல் தேதியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதமர் மோடி தேர்தலில் போட்டியிட தடைவிதிக்க மனு! நீதிபதி விடுப்பு! | செய்திகள்: சிலவரிகளில் | 26.04.2024

விடதர நாகினி..!

இந்து விவசாயிகள் காப்பாற்றப்படவில்லை! ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது! : அய்யாக்கண்ணு

2-ம் கட்டத் தேர்தல் வாக்குப்பதிவு சதவிகிதம்: திரிபுரா முன்னிலை, உ.பி. பின்னடைவு!

சிவ சக்தியாக தமன்னா - அறிமுக விடியோ!

SCROLL FOR NEXT