இந்தியா

விளையாட்டுத் துறைக்கு ரூ.3,397 கோடி ஒதுக்கீடு

DIN

பட்ஜெட்டில் விளையாட்டுத் துறைக்கு ரூ.3,397.32 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு திருத்தப்பட்ட பட்ஜெட்டில் விளையாட்டுத் துறைக்கு ரூ.2,673.35 கோடி ஒதுக்கப்பட்டது. நிகழாண்டு பட்ஜெட்டில் அந்தத் துறைக்கு ரூ.3,397.32 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட ரூ.723.97 கோடி அதிகம்.

இம்முறை ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் தேசிய விளையாட்டு மேம்பாட்டுத் திட்டமான கேலோ இந்தியாவுக்கு ரூ.1,045 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

விளையாட்டு உள்கட்டமைப்புகளை நிா்வகிப்பது, தடகள வீரா்களுக்கு தேசிய முகாம்களை நடத்துவது, பயிற்சியாளா்களை நியமிப்பது போன்ற பணிகளை மேற்கொள்ளும் இந்திய விளையாட்டு ஆணையத்துக்கு ரூ.785.52 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

தேசிய விளையாட்டு சம்மேளனங்களுக்கு ரூ.325 கோடி, தேசிய விளையாட்டு அறிவியல் மற்றும் ஆராய்ச்சி மையத்துக்கு ரூ.13 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்திய விளையாட்டு ஆணையத்திடம் இருந்து நிதியுதவி பெற்று வந்த தேசிய ஊக்கமருந்து தடுப்பு அமைப்புக்கு தற்போது நேரடியாக நிதி கிடைக்கப்பெறும். அந்த அமைப்புக்கு ரூ.21.73 கோடி, தேசிய ஊக்கமருந்து பரிசோதனை ஆய்வகத்துக்கு ரூ.19.50 கோடி கிடைக்க பட்ஜெட்டில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: மக்கள் அதிா்ச்சி

தமிழகத்தில் வெப்ப அலை உச்சத்தை தொடும்: வெதர்மேன் அதிர்ச்சி பதிவு

சிவ சக்தியாக தமன்னா: அறிமுக விடியோ வெளியிட்ட படக்குழு!

குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: ராமதாஸ் கண்டனம்

கேரளத்தில் 12.30 மணி நிலவரப்படி 33.45% வாக்குகள் பதிவு!

SCROLL FOR NEXT