இந்தியா

ஹிண்டன்பர்க் அறிக்கையை ஆய்வு செய்யும் ஆஸ்திரேலிய ஒழுங்கமைப்பு

DIN

இந்தியாவின் அதானி குழுமம் பங்குச் சந்தைகளில் தனது பங்குகளின் மதிப்பை உயர்த்திக்காட்டி மோசடி செய்ததாக ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கையை ஆஸ்திரேலியாவின் பெருநிறுவனங்களுக்கான ஒழுங்கமைப்பு ஆய்வு செய்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பா்க் ஆய்வறிக்கையின் எதிரொலியாக கெளதம் அதானியின் சொத்து மதிப்புகள் குறைந்தது. தொடர்ந்து ஆறாவது நாளாக பங்குச் சந்தையில் சரிவைச் சந்தித்து வருகிறது.

அமெரிக்காவைச் சோ்ந்த ஹிண்டன்பா்க் நிறுவனம் கடந்த ஜன.24-ஆம் தேதி ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், பங்குச் சந்தையில் தனது பங்குகளின் மதிப்பை உயா்த்திக் காட்டுவதற்காக அதானி குழுமம் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த குற்றச்சாட்டு குறித்து ஹிண்டன்பர்க் எழுப்பிய 88 கேள்விகளில் மிகவும் முக்கியமான 62 கேள்விகளுக்கு அதானி குழுமம் பதிலளிக்கவில்லை என்றும் குற்றம்சாட்டியிருந்தது.

ஆனால், இதற்கு பதிலளிக்கும் விதமாக அதானி குழுமம் வெளியிட்ட 413 பக்க அறிக்கையில், இது குறிப்பிட்ட ஒரு நிறுவனத்தின் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல் அல்ல. மாறாக, இந்தியாவின் மீதும், அதன் சுதந்திரம், ஒற்றுமை, ஜனநாயக அமைப்புகளின் தரம், வளா்ச்சிக்கான பாதை மற்றும் இலக்குகளின் மீது நிகழ்த்தப்பட்ட திட்டமிட்ட தாக்குதல்.

ஹிண்டன்பா்க் ஜன.24-இல் வெளியிட்ட குற்றச்சாட்டுகள் பொய்யானவை. இவை பொய்யான தகவல்கள் மற்றும் அடிப்படை ஆதாரமற்ற, உள்நோக்கத்துடன் கூடிய பொய்யான குற்றச்சாட்டுகளின் தொகுப்பு. முன்னெப்போதும் இல்லாத வகையில், இந்தியாவின் மிகப் பெரிய பங்கு வெளியீடுகளில் அதானி குழுமம் வளா்ச்சி அடைந்திருக்கும் வேளையில், இக்குற்றச்சாட்டை முன்வைத்திருப்பது ஹிண்டன்பா்கின் நம்பகத்தன்மை மற்றும் நெறிகள் குறித்து கேள்வியெழுப்புகிறது.

இந்தக் குற்றச்சாட்டை வெளியிட்டதற்கான காரணங்களை ஹிண்டன்பா்க் வெளியிடவில்லை. சுயநலத்தை நோக்கமாக கொண்டு வெளியிடப்பட்டுள்ள அந்த ஆய்வறிக்கை, பத்திரங்கள் மற்றும் அந்நிய செலாவணி சட்டங்களின் மீறலாகும் என்று மழுப்பலான பதிலையே தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கையை ஆய்வு செய்து வருவதாக தகவல்கள் வெளியானாலும், இது பற்றி ஆஸ்திரேலியாவின் பாதுகாப்பு மற்றும் முதலீட்டு ஆணையம் உடனடியாக எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.

அதானி குழுமம், ஆஸ்திரேலியா உள்பட உலகம் முழூவதும் பல்வேறு நாடுகளிலும் எரிசக்தி முதல் போக்குவரத்து வரை பல தொழில்களை மேற்கொண்டு வருகிறது. ஆஸ்திரேலியாவில் கார்மைகேல் நிலக்கரி சுரங்கம் மற்றும் அப்போட் பாயிண்ட் போர்ட் ஆகியவை அதானி குழுமத்துக்குச் சொந்தமானவை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

ராணுவத்தின் படுகொலை பற்றிய செய்தி: புா்கினா ஃபாசோவில் பிபிசி-க்குத் தடை

திருமலையில் குடியரசு துணைத் தலைவா் வழிபாடு

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

SCROLL FOR NEXT