இந்தியா

5-வது முறையாக பொது பட்ஜெட் தாக்கல் செய்யும் 6-வது நிதியமைச்சர்

PTI

புது தில்லி: மன்மோகன் சிங், அருண் ஜெட்லி மற்றும் ப சிதம்பரம் போன்ற ஜாம்பவான்களைத் தொடர்ந்து, ஐந்து முறை  தொடர்ச்சியாக பொது பட்ஜெட்டைத் தாக்கல் செய்யும் சுதந்திர இந்தியாவின் ஆறாவது நிதியமைச்சராகிறார் நிர்மலா சீதாராமன்.

நிர்மலா சீதாராமன் தற்போது தாக்கல் செய்யும் 2023ஆம் ஆண்டின் பொது பட்ஜெட்டானது, கடந்த 2019ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து ஐந்தாவது முறையாகும்.

முன்னாள் மத்திய நிதியமைச்சர்கள், அருண் ஜெட்லி, ப சிதம்பரம், யஷ்வந்த் சின்ஹா, மன்மோகன் சிங் மற்றும் மொரார்ஜி தேசாய் ஆகியோர் ஐந்து முறை வருடாந்திர நிதிநிலை அறிக்கைகளை சமர்ப்பித்த மற்ற அமைச்சர்கள் ஆவர்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடா் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. 2023-24-ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் மக்களவையில் புதன்கிழமை முற்பகல் 11 மணிக்கு தாக்கல் செய்கிறார்.

அவா் தாக்கல் செய்யும் 5-ஆவது நிதிநிலை அறிக்கையாகவும், பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான தற்போதைய பாஜக அரசின் கடைசி முழுநேர நிதிநிலை அறிக்கையாகவும் இது அமையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தமிழகத்தின் நேத்ரா குமணன் தகுதி

GQ இந்தியா விருது விழா - புகைப்படங்கள்

ஏப். 29 முதல் மே 13 வரை வேலூரில் கோடை கால விளையாட்டு பயிற்சி

தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு

காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனம் பட்டமேற்பு விழா: மடாதிபதிகள், ஆதீனங்கள் பங்கேற்பு

SCROLL FOR NEXT