இந்தியா

குட்கா பொருள்களுக்கு தடை விதிக்கலாம்: உச்சநீதிமன்றம்

25th Apr 2023 04:48 PM

ADVERTISEMENT

குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருள்களுக்கு தடை விதிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் குட்கா பொருள்களுக்கு தடை விதித்து கடந்த 2018-ஆம் ஆண்டு மாநில அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த தடையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து சில மாதங்களுக்கு முன்பு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசுத் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதித்ததுடன், குட்கா பொருள்களுக்கு தடை விதித்து புதிய அரசாணை வெளியிட தமிழக அரசுக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT