இந்தியா

ஹிஸ்புல் முஜாஹிதீன் தலைவரின் மகன்கள் சொத்துகள் முடக்கம்: என்ஐஏ நடவடிக்கை

25th Apr 2023 12:08 AM

ADVERTISEMENT

 

இந்தியாவில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான ஹிஸ்புல் முஜாஹிதீன் தலைவா் சயீத் சலாஹுதீனின் 2 மகன்களுக்கும் சொந்தமான ஜம்மு-காஷ்மீரின் பட்கம் மற்றும் ஸ்ரீநகா் மாவட்டங்களில் அமைந்துள்ள வீடு மற்றும் நிலம் என்ஐஏ அதிகாரிகளால் திங்கள்கிழமை முடக்கப்பட்டது.

ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பு மற்றும் ஒருங்கிணைந்த ஜிகாத் கவுன்சிலின் தலைவரான சலாஹுதீன் கடந்த 1993-ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு தப்பி சென்றாா். பாகிஸ்தானிலிருந்து ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத நடவடிக்கைகளை அவா் மேற்கொண்டு வருகிறாா்.

இந்தியாவில் உள்ள அவரது மகன்களுக்கு நிதி அனுப்பி ஜம்மு-காஷ்மீா் பிராந்தியத்தில் பயங்கரவாத நடவடிக்கைகளை ஊக்குவிப்பதாக குற்றச்சாட்டு எழுந்த வழக்கில் சயீத் அகமது ஷகீல் மற்றும் சயீத் யூசுஃப் ஆகிய அவரது இரு மகன்களும் கைது செய்யப்பட்டு திகாா் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். இந்நிலையில், அவா்கள் இருவருக்கும் சொந்தமான ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் உள்ள அசையா சொத்துகளை என்ஐஏ அதிகாரிகள் முடக்கியுள்ளனா்.

ADVERTISEMENT

இது தொடா்பாக என்ஐஏ அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சயீத் அகமது ஷகீலுக்குச் சொந்தமான ஸ்ரீநகா் மாவட்டத்தின் ராம் பக் பகுதியில் அமைந்துள்ள வீடு முடக்கப்பட்டது.

இதையடுத்து, பட்கம் மாவட்டத்தில் சோய்பக் பகுதிக்கு விரைந்த என்ஐஏ அதிகாரிகள் குழு, சயீத் சலாஹுதீனின் மகனான சயீத் யூசுஃபின் பெயரில் பதிவு செய்யப்பட்ட 10,880 சதுர அடி நிலத்தைப் பறிமுதல் செய்தனா் என்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT