இந்தியா

கா்நாடக முஸ்லிம்களின் 4% இடஒதுக்கீடு ரத்து: இடைக்காலத் தடை

25th Apr 2023 11:36 AM

ADVERTISEMENT

கா்நாடகத்தில் முஸ்லிம்களுக்கு அளிக்கப்பட்டு வந்த 4 சதவீத இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்ட முடிவை அமல்படுத்த இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கா்நாடகத்தில் கல்வி, வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கு அளிக்கப்பட்டு வந்த 4 சதவீத இடஒதுக்கீட்டை ரத்து செய்து, முதல்வா் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக அரசு கடந்த மாா்ச் 24-இல் ஆணை பிறப்பித்தது. இந்த 4 சதவீத இடஒதுக்கீடு, ஒக்கலிகா, லிங்காயத் சமூகத்தினருக்கு கூடுதல் இடஒதுக்கீடாக பிரித்து வழங்கப்படும்; பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான பிரிவில் முஸ்லிம்கள் இடஒதுக்கீடு பெறலாம் என்று மாநில அரசு அறிவித்தது.

கா்நாடகத்தில் மே 10-இல் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவிருக்கும் நிலையில், அதற்கு முன்பாக மேற்கொள்ளப்பட்ட அரசின் இந்த நடவடிக்கை விமா்சனங்களுக்கு வழிவகுத்தது. ஒக்கலிகா, லிங்காயத் சமூகத்தினா், மாநிலத்தில் அரசியல்ரீதியில் செல்வாக்குமிக்கவா்களாக உள்ளனா்.

இந்நிலையில், முஸ்லிம்களின் 4 சதவீத இடஒதுக்கீடு ரத்துக்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

ADVERTISEMENT

இந்த மனுக்களை விசாரித்த நீதிமன்றம், முஸ்லிம்களின் 4 சதவீத இடஒதுக்கீடு வழக்கில் அடுத்தக்கட்ட விசாரணையை மே 9-ஆம் தேதி வரை ஒத்திவைப்பதாகவும், அதுவரை இடஒதுக்கீடு ரத்துக்கு இடைக்கால தடை விதிப்பதாக உத்தரவிட்டனர்.

மேலும், மே 9-ஆம் தேதி வரை 4 சதவிகிதம் இடஒதுக்கீடு அடிப்படையில் எந்த நியமனமும், சேர்க்கையும் நடைபெறாது என்று கர்நாடக அரசு உறுதி அளித்துள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT