இந்தியா

ராஞ்சி உயிரியல் பூங்காவில் விலங்குகளுக்குப் பருவகால பழங்கள், மல்டி வைட்டமின்கள்!

15th Apr 2023 12:38 PM

ADVERTISEMENT

 

ஜார்க்கண்டில் வெப்பநிலை அதிகரித்துள்ள நிலையில் அதைச் சமாளிக்கும் வகையில் உயிரியல் பூங்காவில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

ராஞ்சியில் பகவான் பிர்சா உயிரியல் பூங்காவில் உள்ள பிரபல பிர்சா உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளுக்கு ஏர் கூலர்கள், பருவகால பழங்கள், மல்டிவைட்டமின் மற்றும் போதுமான தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

ராஞ்சி வானிலை ஆய்வு மையத்தின் பொறுப்பாளர் அபிஷேக் ஆனந்த் கூறுகையில், 

ADVERTISEMENT

ஜார்க்கண்டின் பெரும்பாலான பகுதிகளில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் நிலவி வருகின்றது. டல்டோங்கஞ்ச் மாவட்டத்தில் வெள்ளியன்று மாநிலத்தின் அதிகபட்ச வெப்பமாக 42.4 டிகிரி செல்சியஸ் பதிவானது. அதேநேரத்தில் ஜாம்ஷெட்பூரில் 42 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. 

தலைநகர் ராஞ்சியில் நேற்று அதிகபட்சமாக 38.8 டிகிரி செய்சியஸ் வெப்பநிலை பதிவானது. இது வழக்கத்தை விட 2.9 டிகிரி அதிகமாகும். 

ஜார்க்கண்டில் அடுத்த நான்று நாள்களக்கு அதிகபட்ச வெப்பநிலை பதிவாகும் மாற்றம் ஏற்பட வாய்ப்பட வாய்ப்பில்லை. 

பிர்சா உயிரியல் பூங்காவின் கால்நடை மருத்துவர் சாஹு கூறுகையில், 

கோடை வெப்பத்திலிருந்து விலங்குகளைப் பாதுகாக்கும் முயற்சியில், மாமிச உண்ணிகள், குறிப்பாக சிங்கங்கள், புலிகள், சிறுத்தைகள் மற்றும் இமயமலைக் கரடிகளுக்கு ஏர்-கூலர்கள் போன்ற பல முயற்சிகளைச் செய்யப்பட்டுள்ளது. 

நேரடி சூரிய வெப்பத்திலிருந்து பாதுகாக்க நிழல்களும் உருவாக்கப்பட்டுள்ளன.

மாமிச உண்ணிகளின் இறைச்சி உட்கொள்ளல் தினசரி உணவிலிருந்து 2 கிலோ குறைக்கப்பட்டுள்ளது.

தாவர உண்ணிகள் தங்கள் உடலை நீரேற்றமாக வைத்திருக்க தர்பூசணி, வெள்ளரி மற்றும் பிற பருவகால பழங்கள் வழங்கப்படுகின்றன. மல்டி வைட்டமின்கள், குடிநீர் மற்றும் குளுக்கோஸ் ஆகியவையும் வழங்கப்படுகிறது என்றார்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT